நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, April 14, 2019

1.5 லட்சம் ஈழத்தமிழர்கள் படுகொலை.. உலகத் தமிழர்களை அந்த ஒருவரால் மட்டுமே பாதுகாக்க முடியும்

Sunday, April 14, 2019
Tags


உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பிரதமர் மோடியால் தான் பாதுகாக்க முடியும் என கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

சட்டமேதை அம்பேத்கர் எந்த மாதிரியான இந்தியாவை உருவாக்க நினைத்தாரோ, அதன்படி அவரது வழியில் பாஜக தலைமையிலான மத்திய அரசு பயணித்து வருகிறது. 

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், தமிழகத்துக்கு என்ன செய்தது. 

10 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதுதான், இலங்கையில் சுமார் 1.5 லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 

இலங்கை உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை, பிரதமர் மோடியால்தான் பாதுகாக்க முடியும். தமிழர்கள் தங்களது தாய்மொழியை மறவாத வகையில் பயிற்சி அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.