நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, April 17, 2019

இலங்கையில் அதிகாலையில் கோர விபத்து - சிறுவர்கள் உட்பட 10 பேர் பலி - பலர் ஆபத்தான நிலையில்..

Wednesday, April 17, 2019
Tagsபதுளை - மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகலை 1.30 மணியளவில் மஹியங்கனை தேசிய கல்லூரிக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தியதலாவையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்துடன் வேன் மோதியதில், அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வேனில் 12 பேர் பயணித்துள்ளனர். வேனில் பயணித்த ஏனைய இருவரது நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தவிபத்தில் 3 சிறுவர்கள் உட்பட பத்துப் பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலம் மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வேனின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக வீதியின் பிழையான பகுதியில் பயணித்துள்ளார். இதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணயில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.