நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, April 6, 2019

கிருபைராசா கிறிஸ்டின் பிரவீனா தனது பிரிவில் தாய்சேய் குடும்ப நல பராமரிப்பினை சிறப்பாகச் செய்தமைக்காக கிழக்கு மாகாணத்தில் 01 ஆம் இடத்தினை பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளார்.
மூதூர் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள கட்டைபறிச்சான் பகுயில் குடும்பநல உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் கிருபைராசா கிறிஸ்டின் பிரவீனா  தனது பிரிவில் தாய்சேய் குடும்ப நல பராமரிப்பினை சிறப்பாகச் செய்தமைக்காக கிழக்கு மாகாணத்தில் 01 ஆம் இடத்தினை பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளார்.கிழக்கு மாகாணத்திலுள்ள சகல தாய்சேய் பராமரிப்பு பிரிவுகளுக்கு வைத்திய குழுவினர் சென்று பார்வையிட்டு அதற்கான புள்ளிகள் வழங்கியமைக்கு அமைவாகவே இவருக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

இவ் கௌரவிப்பு நிகழ்வு (02) திருகோணமலையில் இடம்பெற்றது.இவரது பிரிவில் நிறை குறைவான பிள்ளைகளின் பிறப்பு வீதம் குறைவு என்பதோடு இதற்கு அவர் கற்பணி தாய்மார்களுக்கு வழங்குகின்ற ஆலோசணை வழிகாட்டலே காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவரது சிறப்பான சேவைக்காக 2017 ஆம் ஆண்டு அரசாங்கத்தால்  தாய்லந்து நாட்டிற்கு சுற்றுளாவுக்கு அனுப்பப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.