Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

திங்கள், 25 மார்ச், 2019

துயரமான பதிவு! கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்!கட்டாயம் share பண்ணுங்கள்!

  admin       திங்கள், 25 மார்ச், 2019

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் மூன்றாவது விடுதியில் தனது நான்குமாதக் கைக்குழந்தையுடன் நிர்க்கதியாக நிற்கும்  21 வயதுடைய இளம்தாய் ஒருவர் பற்றியது. 
நிசாந்தன் நிரஞ்சினி: மல்லாவி அனிஞ்சியன்குளம்
இரண்டாம் யுனிட்டில் வசித்து வருபவர்.

 நான்குவயதில் போரில் பெற்றோரை இழந்தநிலையில் வவுனியாவில் இருக்கும் அனாதை இல்லமொன்றில் சேர்க்கப்பட்டிருக்கிறார். பெற்றோர், சகோதரர்கள் என யாருமே அற்றநிலையில் அங்கு 18 வயதுவரை இருந்துள்ளார். 
இந்தநிலையில் உறவினர்கள் எனக்கூறி வந்த சிலரால் அழைத்துவரப்பட்டு பின்னர் உதாசீனப்படுத்தப்பட்டிருக்கிறார்.

எனவே அவர் தன்னை விரும்பிய ஒருவருடன் வாழ்ந்து ஒரு குழந்தைக்கு தாயாகிவிட்டார். கணவனோ பொறுப்பற்றவர்: 

அவரது சிறு காணித்துண்டில் ஓலைக் கொட்டிலில் வாழ்கிறோம். 
 கூலிவேலைகளுக்கு சென்றாலும் ஒருநாளைக்கு 200 ரூபாதான் தருவார். அதில்தான் நாமும் சாப்பிட்டு குழந்தையையும் பராமரிக்க வேண்டும்.  சோயாமீற்றை தவிர வேறு எதுவும் சாப்பிட்டதில்லை. 
சுகவீனமுற்ற குழந்தையுடன் வைத்தியசாலைக்கு வந்து பல நாட்களாகிறது. கணவர் வரவேயில்லை. ஆஸ்பத்திரி உணவை உண்கிறேன். குழந்தைக்கு பாலில்லை. பசியால் அழுகிறது.
அங்கர் வாங்கி பருகுமாறு கூறுகிறார்கள். பத்துரூபாவுக்கு வழியில்லாத நான் பால்மா வாங்க எங்கே போவேன். நான் அனாதை.. என்னைப் பார்க்க யாருமே வரமாட்டார்கள். என் குழந்தைக்கு உடைகளோ பவுடரோ ஓடிக்கொலனோ எதுவுமே இல்லை. எனக்கும் மாற்றுடைகள் இல்லை. தலைக்கு வைக்க எண்ணெய்கூட இல்லை. பிள்ளையின் துணிகளை கழுவுவதற்கு சவர்க்காரம் இல்லை.. இன்றுதான் ஆஸ்பத்திரியில் கோழிக்கறி சாப்பிட்டேன்.. என்கிறார் கண்ணீர் பெருக்கெடுக்க.

இவரது நிலைமை தாதியர்கள் மூலம் வெளிக்கொணரப்பட்டதை அடுத்து நோயாளர் நலன்புரி நிலையத்தினால் சிறு உதவிகள் செய்யப்பட்டுள்ளன. ஏனைய தாய்மார்கள் சிலரும் உதவியிருக்கின்றனர். 
அத்துடன் கணவனுக்கு வருமாறு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. எனினும் அவர் வரப்போவதில்லை என்கிறார் அந்தத் தாய். 
எனவே முடிந்தவர்கள் அந்தத் தாய்க்கு உதவுங்கள். அவரிடன் தொலைபேசி வசதியில்லை.  இன்னும் மூன்று நாட்களுக்கு தான் வைத்தியசாலையில் இருப்பதாக கூறினார். இன்று எம்மால் முடிந்த சிறு உதவியை செய்துவிட்டு வந்தோம். மீண்டும் நாளை வருவதாக அவரிடம் கூறிவிட்டு எனது தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். 

தயவுசெய்து கிளிநொச்சியில் இருக்கும் பரோபகாரிகள் பொது அமைப்புகள்., அதிகாரிகள் அனிஞ்சியன்குளம் கிராமசேவையாளரை தொடர்புகொண்டு அவர் ஊடாக இவருக்கும் குழந்தைக்கும் தேவையான உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொடுக்கவேண்டும்.

அத்துடன் கணவன் எனக்கூறப்படும் நபரினதும் அவரது உறவினர்களினதும் பொறுப்புக்கூறல் பற்றியும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

மனசு கனக்கிறது..
மூன்றாம் வார்ட்டில் இருக்கிறார்
முடிந்தவர்கள் சென்று உதவுங்கள்.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! துயரமான பதிவு! கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்!கட்டாயம் share பண்ணுங்கள்!

Previous
« Prev Post