நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, March 4, 2019

BREAKING NEWS | நேற்றைய தினம் சில அடிப்படைவாத கத்தோலிக்கர்களால் தகர்க்கப்பட்ட மன்னார் திருக்கேதீச்சரம் ஆலயத்தின் வரவேற்பு வளைவினை அதே இடத்தில் மீள நிறுவ மன்னார் நீதிமன்றம் உத்தரவு.சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இன்றில் இருந்து நான்கு நாட்களுக்குள் குறித்த இடத்தில் தற்காலிகமாக வளைவை அமைக்குமாறும், 

  இதில் சம்மந்தப்பட்ட அனைவரையும் எதிர்வரும் 5 ஆம் திகதி  நீதிமன்றில் ஆஜராகவும் பணிக்கப்பட்டுள்ளது.

அரசகரும மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசனின் உத்தரவுக்கமைய மன்னார் மாவட்ட சிரேஸ்ட்ட பொலிஸ் அத்தியட்சகர் குறித்த வழக்கினை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று உடனடியாக அமுலாகும் வகையில் நீதிமன்ற தீர்ப்பினை பெற்றுள்ளார்.

சமூக ஊடகங்கள் ஊடாக ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. 

இந்த மிலேச்சத்தனமான செயலுக்கு தம் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொண்ட கத்தோலிக்க உறவுகளுக்கும்,
   
  அன்பு நண்பர்களுக்கும் மிக்க நன்றி. 

மதங்கள் கடந்து நாங்கள் என்றும் தமிழர்கள் என்ற உணர்வோடு ஒருமித்து பயணிப்போம்.