நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, March 30, 2019

புத்தாண்டுக்கு பின்னர் மறுசீரமைக்கப்படும் அமைச்சரவை?

Saturday, March 30, 2019
Tags


தமிழ், சிங்களப் புத்தாண்டுக்குப் பின்னர் அமைச்சரவை மறுசீரமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளில் மாற்றம் இடம்பெறாவிடினும், ஒரு சில அமைச்சர்களுக்குக் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

மீண்டும் தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் யோசனைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இணைந்தால்கூட அமைச்சுப் பதவி வழங்கமாட்டார் எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

எனவே, ஈ.பி.டி.பி., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து தேசிய அரசமைத்தால்கூட, ஐக்கிய தேசிய கட்சியின் பக்கமுள்ள சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவியை வழங்க முடியாத நிலை ஏற்படும். இதன்காரணமாக தேசிய அரசாங்கத்தினை அமைக்கும் யோசனையை ஐக்கிய தேசிய கட்சி கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ஐக்கிய தேசிய கட்சி பக்கமுள்ள மூத்த உறுப்பினர்கள் சிலரும்,  சுதந்திர கட்சி உறுப்பினர்களும் ஜனாதிபதியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

“தேசிய அரசு அமைக்கப்படாது. எனினும், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஐ.தே.கவால் முன்மொழியப்படும் பெயர்ப்பட்டியலை ஏற்கவேண்டும்” என்று இதன்போது ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அவரும் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

இதன்படி பியசேன கமகே, விஜித் விஜதமுனி சொய்சா, சரத் பொன்சேகா ஆகியோருக்கு அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது. இந்திக்க பண்டார, மனுஷ நாணயக்கார உள்ளிட்ட மேலும் சிலருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி கையளிக்கப்படவுள்ளது.

இதற்காக தற்போது இரண்டுக்கும் மேற்பட்ட அமைச்சுப் பதவிகளை வகித்திருப்பவர்களிடமிருந்து விடயதானங்கள் கழற்றப்பட்டு, அவை புதியவர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.