நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, March 13, 2019

'வாங்கோ... காட்டுறன்' என பெண் உறுப்பினரை அழைத்த ஆர்னோல்ட்: என்ன நடந்தது தெரியுமா?யாழ் மாநகரசபையின் அன்மைய அமர்வில் இடம்பெற்ற சம்பவமொன்று, சபையில் பெரும் சிரிப்பொலியை ஏற்படுத்தியது.

   
   
   
  யாழ் மாநகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களிற்கு தமிழில் பெயர் சூட்டுவது தொடர்பான விவாதம் இன்று காலையில் மாநகரசபையில் இடம்பெற்றது.

இதன்போது, யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வரும், ஈ.பி.டி.பி உறுப்பினருமான யோகேஸ்வரி பற்குணராஜா எழுந்து- "ஆர்னோல்ட் என்ற பெயரின் தமிழ் அர்த்தம் என்ன?" என கேட்டார்.

இந்த கேள்வியால் நிலைகுலைந்த ஆர்னோல்ட், பெரும்பாலான சூழல்களில் எல்லா ஆண்களும் ஒளிந்துகொள்ளும், ஆழ்மனதில் படிந்துள்ள உத்தியிடம்- இரட்டை அர்த்தத்தில், ஆபாசமாக பேசி, பெண்களை பணிய வைக்கும்- சரணடைந்தார்.

சட்டென, "வாங்கோ காட்டுகிறேன்" என்றார்.

அவரது இரட்டை அர்த்த பேச்சால், சபையிலிருந்த மற்றைய உறுப்பினர்கள் (பெரும்பாலானவர்கள் ஆண்கள்) கைகொட்டி சிரித்தனர்.

   
   
   
  பின்னர் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஆர்னோல்ட், "என்னுடைய பெயருக்கு தமிழ் அர்த்தம் இருக்கிறது. வாருங்கள், அதை காட்டுகிறேன் என்றுதான் சொன்னேன்" என்றார்.

சிறிதுநேர சிரிப்பொலியின் பின்னர் இந்த விடயம் அடங்கியது.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!