நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, March 6, 2019

பாதுகாப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும்: சிறிதரன்!


2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டுள்ள பரியளவிலான தொகை நாட்டினது பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார்.

   
   
   
  நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த வருடத்தின் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட செலவினத்திலே பாதுகாப்பு அமைச்சிற்கு 393.7 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது மொத்த வரவு செலவுத்திட்டத்தின் ஆறில் ஒரு பகுதி நாட்டினது பாதுகாப்பு செலவினத்திற்காக பாதுகாப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது யுத்தம் இல்லை. நாட்டில் யுத்தம் முடிந்து விட்டதாக சர்வதேசத்திற்கு இலங்கை பிரசாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில், பாரியளவிலான தொகை இந்த வரவுசெலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

   
   
   
  எனவே ஒரு சமாதானம் நிலவுகின்ற காலத்தில் இந்தளவு பாரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளமை இந்த நாட்டினது பொருளாதாரத்தில் எந்தளவு தாக்கத்தினைச் செலுத்தும் என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அபிவிருத்திக்குரியதாகக் கூறப்படுகின்ற இந்த வரவு செலவுத்திட்டத்தில் ஏன் இந்தளவு பாரிய தொகை பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது கேள்விக்குரிய விடயமாகும்” என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!