நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, March 14, 2019

படிக்கும்போது அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம். படிப்பு முடித்ததும் டக்ளஸ் அலுவலகத்தில் வந்து வேலை கேட்பதுஅடங்க மறு!

பாலன் தோழர் Balan Chandran அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறிக் கொண்டு அவருடைய ஆவேசம் மிக்க பதிவொன்றை பகிர்கிறேன்...

  •அடங்க மறு!
மாணவர்கள் அடங்க மறுக்கிறார்களா?

யாழ் பல்கலைகழக மாணவர்கள் ஜ.நா வில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் கொடுக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி வாகன பேரணி ஆரம்பித்துள்ளனர்.

படிக்க போன மாணவர்களுக்கு அரசியல் எதற்கு என்ற விமர்சனம் ஒருபக்கம். படிக்கும்போது அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம். படிப்பு முடித்ததும் டக்ளஸ் அலுவலகத்தில் வந்து வேலை கேட்பது என்று கிண்டல் மறுபக்கம்.

இத்தனைக்கும் நடுவில் மாணவர்கள் தம் வரலாற்று கடமையை நிறைவேற்ற ஆரம்பித்துள்ளார்கள். தமிழ் மக்களுக்;காக பேரணி செல்கின்றனர்.

ஆளுநர் ஒரு தமிழர். ஆனால் அவர் இலங்கை அரசுக்காக ஜெனிவா செல்கிறார்.

சம்பந்தர் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர். அவர் சொகுசு பங்களாவுக்காக இலங்கை அரசுக்கு முழு ஆதரவு வழங்கிறார்.

சுமந்திரன் கால அவகாசத்திற்கு ஆதரவு தெரிவிப்பது மட்டுமன்றி கால அவகாசத்தை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துகிறார்.

இந்த நிலையில்தான் மாணவர்கள் களத்தில் குதித்துள்ளனர். 

  தலைவர்களை விலைக்கு வாங்கிவிட்டால் தமிழ் மக்கள் அடிமையாக கிடந்துவிடுவார்கள் என்ற இலங்கை அரசின் நினைப்பிற்கு எதிராக வந்துள்ளனர்.

மாணவர்கள் போராட்டம் கால அவகாசம் கொடுப்பதை தடுத்து நிறுத்திவிடாமல் போகலாம்.

ஆனால் மாணவர்களின் போராட்டம் இலங்கை அரசுக்கு மட்டுமல்ல உலகத்திற்கும் ஒரு செய்தியை சொல்லுகிறது.

அது, மாணவர்கள் அடங்க மறுக்கிறார்கள் என்பதே.

இன்று அடங்க மறு
நாளை அத்து மீறு