நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, March 31, 2019

மகிந்தவை மீண்டும் அரியணை ஏற்ற சீனாவுடன் உறவை வலுப்படுத்துகிறதா தமிழ் தேசிய மக்கள் முன்னணி?: ஒரேநாளில் இரண்டுமுறை இரகசிய பேச்சு!

Sunday, March 31, 2019
Tagsதமிழ் அரசியல்பரப்பிலுள்ள ஒவ்வொரு பிரமுகர்களையும், ஒவ்வொரு நாட்டுடன் தொடர்புபடுத்தி குற்றச்சாட்டு சுமத்துவதையும், அந்த நாடுகளின் “கைப்பிள்ளை“களாக இயங்குவதாக குறிப்பிடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி, சீன தூதரக அதிகாரிகளை நேரில்- இரகசியமாக- சந்தித்து பேசியுள்ளனர்.இந்த தகவல் வெளிவரும் நிலையில் முன்னனி ஆதரவாளர்கள் தற்கொலை செய்யலாம் என கட்சி வட்டாரம் திகைப்படைந்துள்ளது!

சில வாரங்களின் முன்னர் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட சீன தூதர் தலைமையிலான குழுவின் அங்கம் வகித்த, அரசியல் விவகாரங்களிற்கு பொறுப்பான அதிகாரிக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குமிடையிலுமே இந்த இரகசிய பேச்சு நடந்தது என்பதை முன்னணிக்குள் உள்ள சில தகவல் மூலங்களில் இருந்து தமிழ்பக்கம் அறிந்தது.

பொதுவாகவே, அரசியலில் உள்ளவர்களும், கட்சிகளும் தமக்குள்ளும், பிறநாடுகளுடனும் தொடர்பில் இருப்பது வழக்கம். எனினும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதிலிருந்து தம்மை வித்தியாசமானவர்களாக காண்பிப்பது வழக்கம். தம்மை தவிர மற்றைய எல்லா கட்சிகளையும் கடுமையான விமர்சிப்பார்கள். விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டுக்குள் வருவதென்றால், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியை வெளியேற்ற வேண்டும், அவர்கள் இந்தியாவின் சொற்படி நடக்கிறார்கள், தேர்தல் சமயத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்தியாவிற்கும் சென்று வந்தார் என முன்னணி குற்றம்சாட்டியிருந்தது.

இந்தநிலையில், சீனத்தூதரக அதிகாரியை மட்டும் மிகமிக இரகசியமாக முன்னணி சந்தித்தது, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

சில வாரங்களின் முன்னர் யாழ்ப்பாணம் வந்த இலங்கைக்கான சீனத்தூதர் தலைமையிலான குழு யாழில் பல்வேறு சந்திப்புக்களை நடத்தியது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி சரவணபவனை அந்த தூதுக்குழு சந்தித்தது. உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு சென்றபோதே சந்திப்பு நடந்தது. அந்த சந்திப்பு விபரத்தை சரா எம்.பி செய்தியாக வெளியிட்டார்.

இதை தவிர, சிவில் செயற்பாட்டாளர்கள், சில பத்திரிகையாளர்களையும் சீன தூதர் சந்தித்தார். அரசியல் தரப்புக்கள் என யாரையுமே சீன தூதர் சந்திக்கவில்லை. சீன தூதுக்குழுவும் சந்திக்கவில்லை.

ஆனால், தூதரின் சந்திப்புக்கள் நடந்த சம நேரத்தில், இலங்கைக்கான சீன தூதரக அரசியல் விவகாரங்களிற்கு பொறுப்பான அதிகாரியை தமிழ் தேசிய முன்னணி பிரமுகர்கள் இரண்டுமுறை இரகசியமாக சந்தித்து பேசிய தகவல், முன்னணிக்குள் உள்ள தகவல் மூலங்களில் இருந்து தமிழ்பக்கத்திற்கு கிடைத்தது.

சீன தூதுக்குழு யாழ் நகர மையத்திலுள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்தது. அந்த ஹொட்டலிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன், சட்டஆலோசகர் க.சுகாஸ் ஆகியோர் சென்றிருந்தனர். வி.மணிவண்ணன் ஹொட்டலின் கீழ்ப்பகுதியில் காரில் காத்திருக்க, க.சுகாஸ் மாத்திரம் சீன தூதரக அதிகாரியை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

பின்னர் அன்றிரவே இரண்டாவது முறையாக, அதே அதிகாரியுடன் முன்னணி பேச்சு நடத்தியது. வி.மணிவண்ணன் மட்டும் இந்த சந்திப்பிற்கு சென்றிருந்தார்.

இந்த சந்திப்புக்கள் தொடர்பாக முன்னணியோ, சீன தூதரகமோ இதுவரை மூச்சும் விடவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.