நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, March 3, 2019

உண்மையான கிறிஸ்தவர்களோ அல்லது பௌத்தர்களோ இவ் இழி செயலை செய்திருக்க மாட்டார்கள்!அங்கயன் சீற்றம்!ஈழத்தில் பாடல் பெற்ற தலங்களான திருகோணேச்சரமும் மற்றும் திருக்கேதீச்சரமும் உலகெங்குமுள்ள இந்துக்களின் அடையாளம்.
   
   
   
  இலங்கை முழுவதும் உள்ள சைவர்கள் மகா சிவராத்திரிக்கு இங்கு ஒன்று கூடி சிவலிங்கம், நந்திக் கொடி, சிவநாமம் தாங்கிய பதாதைகைகளை காட்சிப்படுத்துவது சைவர்களின் உரிமை இதை எவரும் கேள்விக்கு உள்ளாக்க முடியாது.

திருகோணேச்சரம் சிவலிங்கம், திருக்கேதீச்சரம் சிவராத்திரி வளைவு உடைப்பு என்பன சைவத்தமிழர்களை கடும் வேதனைக்கும் விசனத்துக்கும் உள்ளாகியுள்ளது. உடைத்த சிவலிங்கத்தையும்  வளைவையும் மீள் நிர்மாணம்  செய்து  வழங்க வேண்டியது தேசிய மத நல்லிணக்கத்திற்கான அத்தியாவசிய தேவைப்பாடாகும். இது Dr Suren Rāghavan - Governor Northern Province, Dr. MLAM Hizbullah & Mano Ganesan - மனோ அண்ணனின் உடனடி கவனத்திற்கு...


ஆகவே சம்பந்தப்பட்ட எல்லா தரப்புகளும் உடனடியாக மத நல்லெண்ணத்தை செயலில் காட்டி சைவர்களின் புனித வழிபாட்டு நாளான மகா சிவராத்திரியை நாளை சிறப்பாக அனுஷ்டிக்க ஆவன செய்ய வேண்டும்.

இக்குழுவின் இந்த செயலை ஆமோதிக்காதவர்கள் எத்தனையோ பௌத்த மற்றும் கத்தோலிக்க சகோதரர்கள் எம் மத்தியில் உள்ளார்கள்.
   
   
   
  நம் வசைச்சொற்கள் ஓரு மதத்தினை இழிவு படுத்தல்கள் அவர்களையும் எமக்கு எதிரிகளாக்கிவிடும்.  

யாரோ செய்த சின்னதனமான வேலைககு புனித இயேசு பிரானையோ அல்லது புத்த பெருமானையோ நிந்திக்காது நமது மனித விழுமியங்களை நிரூபித்து வோம்! 

இச்சந்தர்ப்பத்தில் இவ் இழி செயலை வன்மையாக கண்டிப்பதுடன் சகல மதத்தினரையும் பொறுப்புடன் செயல்படுமாறு வேண்டி நிற்கின்றேன்.
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!