நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, March 31, 2019

மணோவும் கூட்டமைப்பும் மாபெரும் கூட்டணி அமைக்க முடிவு!

Sunday, March 31, 2019
Tagsஇருநாட்களுக்கு முன், இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவின் அழைப்பின் பேரில், நானும், அவரும் பாராளுமன்ற வளவில் சந்தித்தோம். 

இதன் போது, வடகிழக்கிற்கு வெளியில், தமிழரசு கட்சி தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும், கட்சி கிளைகள் அமைப்பதையும், தமிழரசு கட்சியின் ஜனநாயக உரிமையாக முழு மனதுடன் வரவேற்கும் எமது நிலைப்பாட்டை மாவையிடம்  நான் நேரடியாக எடுத்து கூறினேன். 

இதற்கு பதிலளித்த மாவை சேனாதிராசா எம்பி, "இவ்விஷயம் தொடர்பில் நான் எங்கள் கட்சி கொழும்பு கிளை கூட்டத்தில்  தெரிவித்தாக  சமீபத்தில் வெளியான கருத்துகள் ஊடகங்களில்  மிகைப்படுத்தப்பட்டு விட்டன. உண்மையில், இந்நாட்டில் தமிழர் இன்று எதிர்நோக்கும் பாரிய பல சவால்களை முறியடிக்க  நமது இரண்டு கட்சிகளும் புரிந்துணர்வுடன் கூட்டாக செயற்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு" என்றார். 

மேலும் "இது தொடர்பில் விரைவில் நாம் இரு சாராரும்  சந்தித்து உரையாடுவோம், தம்பி!" என்று தமிழரசு தலைவர் மாவை சேனாதிராசா எம்பி என்னிடம் கூறினார். 

"அப்படியே செய்வோம், அண்ணா" என நான் பதிலளித்தேன்.