நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, March 9, 2019

தவறான திருமணம்! மைத்திரி மீது கடுமையான குற்றச்சாட்டை வைத்த மகிந்த

Saturday, March 09, 2019
Tags


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தவறான திருமணத்தை செய்து கொண்டதாகவும் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி தான் தலையிட்டு விவாகரத்து செய்து, மணமகனை மீண்டும் அழைத்து வந்தாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

   
   
   
  கூட்டு எதிர்க்கட்சி கண்டியில் நேற்று ஒழுங்கு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்து குறித்து பேசிய மகிந்த ராஜபக்ச, 6 வது பராக்கிரமபாகு மன்னன் விவசாயம் செய்யவில்லை எனவும்

முதலாவது பராக்கிரமபாகுவே விவசாயத்தை போஷித்ததாகவும் ரணில் விக்ரமசிங்கவுக்கு தவறி விட்டதாகவும் கூறியுள்ளார்.

   
   
   
  கொக்கேய்ன் போதை காரணமாக இந்த தவறு நடந்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் மைத்திரி அணியை சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை