நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, March 12, 2019

மைத்திரியை படம் எடுக்க சிங்கப்பூரில் இருந்து வருகை தந்த வல்லுனர்கள்: பின்னணி என்ன தெரியுமா?


அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தனிவழி செல்ல தயாராகி விட்டார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

   
   
   
  தேர்தலிற்கான முன்னேற்பாடுகளில் ஜனாதிபதி இறங்கியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்க, பிரச்சார பிரிவொன்றையும் ஜனாதிபதி அமைத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்துவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை புகைப்படம் எடுப்பதற்காக சிங்கப்பூரை சேர்ந்த புகைப்பட கலைஞர்கள் இலங்கைக்கு வந்து தங்கியிருக்கிறார்கள் என்ற நம்பகரமாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த குழுவின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் ஆரம்பித்துள்ளது.

சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுன தரப்பு கூட்டணியாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமா?, இரண்டு கட்சியின் இணைந்த வேட்பாளர் யார்? என்ற கேள்விகளிற்கு இன்னும் விடை காணப்படவில்லை.

கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க இருதரப்பும் ஓரளவு இணங்கி வந்த நிலையில், கடந்த 8ம் திகதி கண்டியில் பகிரங்க அறிவிப்பு விடப்படவிருந்தது. எனினும், இறுதி நேரத்தில் அது குழப்பத்தில் முடிந்தது.

   
   
   
  ஜனாதிபதி வேட்பாளர் குறித்த குழப்பம் நீடித்து வரும் நிலையில், ஜனாதிபதி தேர்தல் பந்தயத்தில் நானும் இருக்கிறேன் என்பதை மஹிந்த அணியினருக்கு உணர்த்தும் நடவடிக்கைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறங்கியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலிற்கான பிரச்சார பணிகளை முன்னெடுக்க, பிரச்சார அணியொன்றை உருவாக்கியுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் பணியாற்றிய ரங்க கலன்சூரிய, ஜனாதிபதியின் தற்போதைய ஆலோசகர்களில் ஒருவரான சிரான் லக்திலக ஆகிய இருவரின் மேற்பார்வையில் இந்த பிரச்சார அணி இயங்கவுள்ளது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ஜனதிபதியை புகைப்படங்கள் எடுப்பதில் இந்த குழுவினர் ஈடுபட்டனர். அண்மையில் திறக்கப்பட்ட பிரமாண்ட நீர்ப்பாசன திட்டமான மொகஹகந்த நீர்ப்பாசன திட்டப்பகுதியிலேயே கடந்த ஞாயிறு புகைப்பட பிடிப்பு இடம்பெற்றது.

ஜனாதிபதியின் காலத்தில் உருவாக்கப்பட்ட திட்டப்பணி பகுதிகளில் இந்த புகைப்படப் பிடிப்பு தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

   
   
   
  ஜனாதிபதியின் இந்த நகர்வு, தனிவழி செல்லவும் தயாராக இருக்கிறேன் என்ற செய்தியை மஹிந்த ராஜபக்ச தரப்பிற்கு சொல்வதாகவும் அமைந்துள்ளது. எப்படியோ, அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் சுதந்திரக்கட்சி- பொதுஜன பெரமுன முகாமிற்குள் பெரும் சிக்கலை தோற்றுவிக்கும் போலத்தான் தெரிகிறது.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!