நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, March 17, 2019

ஓகஸ்டுக்கு முன் புதிய அரசமைப்பு கூட்டமைப்பின் நிலைப்பாடு அதுவே!


புதிய அரசமைப்பில் நிறைவேற்று அதிகார முறையைஒழித்தல், தேர்தல் முறையில் மாற்றங்களைச் செய்தல், மத்தியில் குவிந்துள்ள அதிகாரங்களை மாகாணங்களுக்குப் பகிர்ந்தளித்தல் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் அதிகாரப் பகிர்வு தவிர்ந்த ஏனைய இரண்டிலும் சில கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்த அதிகாரப் பகிர்வுக்காக நாடு அழிவின் விளிம்புவரை சென்று மீண்டிருக்கின்றது. ஆகையால் அனைத்துத் தரப்பினரும் அதற்கு ஆதரவளிப்பார்கள். நாங்கள் அடுத்தவாரம் ஜனாதிபதியை சந்தித்து இதுகுறித்துப் பேசுவோம். டிசெம்பர் மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும். நவம்பர் 9 ஆம் திகதிக்கு முன்னர் வேட்புமனு தாக்கல் செய்யப்படவேண்டும். ஆகையால் ஓகஸ்ட் மாதத்துக்கு முன்னர் நாங்கள் புதிய அரசமைப்பைக் கொண்டுவரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ‘காலைக்கதிர்’ நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

 புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகளில் மூன்று வருட வேலைத்திட்டத் துக்குப் பின்னர் இரண்டாவது அறிக்கை வெளிவந்திருக்கிறது. அந்த அறிக்கையில் நிபுணர்களால் செய்யப்பட்ட வரைவும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. நாங்கள் அடைந்து கொண்டதில் அது பெரியதொரு முக்கிய
மான நிகழ்வு என்று நான் கருதுகின்றேன். அது முழுமை பெறவேண்டும்.
அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது, இதனால் ஒரு பிரயோசனமும் கூட்டமைப் புக்கு இல்லை. இதற்கு முன்னரும் பல அறிக்கைகள் வந்தன. அவை எல்லாவற்றையும் அடுக்கி வைத்திருக்கின்றார்கள். அதேபோல் இதனையும் அடுக்கி வைப்பார்கள் என்று ஜே.வி.பி. நாடாளுமன்றத்தில் கூறியிருந்தது.
இது நிஜமாகப் போவதில்லை என்றும் அவர்கள் சொன்னார்கள். அதிலும் ஓரளவுக்கு உண்மையிருக்கிறது. அது நடைமுறைக்கு வர வேண்டியது அவசியம். அதனைவிடுத்து அது வருமென்றோ நடைமுறைப்படுத்தப்படுமென்றோ சொல்வதில் மக்களுக்கு எந்தவிதமான பிரயோசனமும் இல்லை.
அது சம்பந்தமாகத் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயா தனியாக ஜனாதிபதியைச்
சந்தித்து, தமிழ் மக்களுக்குக் கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதற்கமைய கடந்த வாரத்தில் ஒரு சந்திப்பை மீள நடத்தியிருந்தோம். அந்தச் சந்திப்பில் அரசமைப்பு உருவாக்கப் பணி களில் அடுத்தது என்ன செய்யவேண்டும் எனப் பேசப்பட்டது.
அதாவது, நிபுணர்களின் வரைவு இருக்கிறது. அதில் மூன்று விடயங் கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதிகாரப் பகிர்வு, நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தல், தேர்தல் முறை சீர்திருத்தம் என்பன அதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
தேர்தல் முறைசீர்திருத்தம், நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு ஆகியன குறித்து மாறுபட்ட கருத்துக்கள் அந்தக் கூட்டத்
திலும் முன்வைக்கப்பட்டன.
ஆனால், அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக எந்த மாறுபட்ட கருத்தும் வரவில்லை. ஆகையால், இந்த மூன்றிலும் முக்கியமானதாக இருப்பது அதிகாரப் பகிர்வு சம்பந்தமான விடயம் தான் என்று நாங்கள் சொன்னோம்.
அது சம்பந்தமாகத் தான் இந்த நாட்டில் ஒரு போர் கூட மூன்று தசாப்த காலமாக நிகழ்ந்திருக்கிறது. அதன் காரணமாகத் தான் நாடு பிரிவதற்கான ஒரு விளிம்புக்கும் போய் வந்தது. ஆனபடியால் அது குறித்து ஓர் இணக்கப்பாடு இருக்கின்றபோது அதனை நாங்கள் செய்ய வேண்டியது மிகவும் அத்தியாவசியம் என்று சொல்லி யிருந்தோம்.
ஆகவே, அந்த மூன்று விடயங்களில் இரண்டைத் தவிர்த்து தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வை உள்ளடக்கும் ஓர் அதிகாரப் பகிர்வு முறையை அரசமைப்புத் திருத்தம் ஊடாக எப்படிச் செய்வது என்று அந்தக் குழுவுக்கு ஆலோசனை கொடுக்குமாறு நான்கு பேர் கொண்ட குழுவை ஜனாதிபதி நியமித்திருக்கிறார்.  அந்தக் குழுவில் நானும் இருக்கின்றேன். சென்ற வாரம் அது குறித்து நாங்கள் பேசியிருக்கின்றோம். அதனடிப்படையில் இப்போது சில ஆவ
ணங்களைத் தயாரிக்கிறோம். வரைவுகளைத் தயாரிக்கிறோம்
இந்தக் குழு மீளவும் சென்ற வாரம் சந்திப்பதாக இருந்தது. ஆனால் சந்திக்கவில்லை. அநேகமாக அடுத்த வாரம் ஜனாதிபதியைச் சந்தித்து மஹிந்த தரப்பையும், ஜே.வி.பியையும்கூட அதற்கு அழைத்து தற்போதைய சூழ்நிலையில் அதிகாரப் பகிர்வை மட்டும் உள்ளடக்கும் ஓர் அரசமைப்புத் திருத்தத்தை முன்னெடுப்பது எவ்வாறு என்றும், என்னென்ன விடயங்களை
மாற்றுகின்றபோது அதனை அடையலாம் என இந்தக் குழு கொடுக்கும் சிபாரிசை ஆராய இருக்கின்றோம்.
அதனை ஆராய்ந்து சில மாதங்களுக் குள்ளேயே அதனைச் செய்து முடிக்கவேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. ஏனென்றால்., ஜனாதிபதித் தேர்தல் டிசெம்பர் 9 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும். நவம்பர் 9 ஆம் திகதிக்கு முன்னர் அதற்கான வேட்புமனு கோரப்படவேண்டும்.
ஆகையால்,  ஓகஸ்ட் மாதத்துக்கு முன்னர் இவைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. அதற்கான முன்னெடுப்புக்களைத்தான் இப்பொழுது செய்து கொண்டிருக்கிறோம். – என்றார்.
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!