நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, March 14, 2019

படுகொலைக் களமாகும் பல்கலைக்கழக வளாகம்!யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கல்வி கற்கும் அனுராதபுரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் நேற்று மாலை கிளிநொச்சி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். பகிடிவதையினால் ஏற்பட்ட மனஉளைச்சலினாலேயே அவர் தற்கொலை செய்துள்ளதாக தெரியவருகின்றது.

   
   
   
  அண்மைக்காலமாக பல்கலைக்கழகங்களில் பகிடிவதை செயற்பாடுகள் அதிகரித்துள்ளதையும், அதனால் பல மாணவர்கள் பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகைள இடைநிறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.

கடந்த வாரத்தில் மட்டும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் இரண்டு செய்திகள் கானொளி ஆதாரத்துடன் வெளியாகி இருந்தது. அது தொடர்பில் பல்கலைக்கழக சமூகம் எந்தவொரு நடவடிக்கையையும் எடுத்திருப்பதாக தெரியவில்லை. மாறாக அவர்கள் அந்த சம்பவத்தை மூடி மறைக்கவே முற்படுகின்றார்கள். 

முதலாவது சம்பவமாக மாணவன் ஒருவன் பகிடிவதையால் மோசமாக தாக்கப்பட்டு தனது கல்வியை இடைநிறுத்தியிருந்தார். அதனை தனது முகநூலிலும் பதிவு செய்திருந்தார்.

இரண்டாவது சம்பவமாக மாணவிகள் பலர் தங்களது கொப்பிகளை தலைக்கு மேலே வைத்தபடி நடந்து செல்லும் கானொளி வெளியாகி இருந்தது.

இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக சமூகம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

இப்பிடியான சம்பவங்களுக்கு உடன் நடவடிக்கை எடுத்திருந்தால் நேற்றைய கொலை நடந்திருக்குமா?

இனப்படுகொலைக்காக நீதி கேட்கும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பல்கலைக்கழக படுகொலைகள் தொடர்பில் நீதியான விசாரணை நடாத்தப்பட்டு குற்றவாளிகள் மேல் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோர வேண்டும். மாறாக அமைதிப் பேணுமாக இருந்தால் அவை தனது சகாக்களை காப்பாற்றும் ஒரு முயற்சி என்று தான் கருத வேண்டி ஏற்படும்.

   
   
   
 

இச் சம்பவங்கள் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியத்திடம் தெரிவித்த போது இச்சம்பவங்கள் யாழ் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் உனது வேலையை மட்டும் நீ பார் என்று மிரட்டும் தொனியில் பதில் வந்ததாக எமக்கு ஆதாரங்களுடன் செய்திகள் வந்துள்ளன.

இது தொடர்பில் அடுத்த விரிவான பதிவு வெளியாகும்!

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!