நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, March 30, 2019

மைத்திரி தொடர்பில் ஜோதிடர் வெளியிட்டுள்ள தகவல்! கோத்தபாயவின் பரிதாபம்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டால் மீண்டும் அவரே வெற்றி பெறுவார் என பிரபல ஜோதிடர் ஆருடம் வெளியிட்டுள்ளார்.

பிரபல ஜோதிடர் இந்திக்க தொட்டவத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக ஜனாதிபதி முன்னெடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக போதைப்பொருளை இல்லாதொழிக்க தீவிர நடவடிக்கை, பௌத்த மதத்தை சர்வதேச ரீதியாக பிரபலப்படுத்தும் நடவடிக்கையில் ஜனாதிபதி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் அடுத்த தேர்தலில் அதிகளவான வாக்குகளை பெறுவதற்கான சாதக நிலைகளை ஏற்படுத்தும் என ஜோதிடர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிட்டால், தோல்வி அடைவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மை மக்களின் வாக்குகள் கோத்தபாயவுக்கு கிடைக்காமல் போகும். இதன்மூலம் அவரின் தோல்வி உறுதியாகும் என ஜோதிடர் மேலும் தெரிவித்துள்ளார்.