நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, March 5, 2019

செம்மணியை தொடர்ந்து பூநகாரி மண்ணித்தலையில் தோன்றிய மகா சிவலிங்கம், மக்கள் சிறப்பு வழிபாடு..

பூநகாி மண்ணித்தலை பகுதியில் சோழா்களால் அமைக்கப்பட்ட சிவன் கோவிலை பாதுகாக்கும் வகையில் நேற்றய தினம் புதிதாக மகா சிவலிங்கம் ஒன்று அமைக்க ப்பட்டிருக்கின்றது. 

  மிக பழமையான மண்ணித்தலை சிவன் ஆலயம் நீண்டகாலமாக புனரமைப்பு செய் யப்படாமல் பராமாிப்பின்றி காணப்படுகின்றது. இந்நிலையில் அந்த ஆலய சூழலை ஆய்வு செய்த யாழ்.பல்கலைக்கழக தொல்லியல்துறை, 

அது சோழா் காலத்தில் கட்டப்பட்ட சிவன் ஆலயம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது டன் அந்த ஆலயம் தொல்லியல் முக்கியத்துவம்வாய்ந்த பகுதி எனவும் உறுதிப்படுத் தியிருக்கின்றது. 

  இந்நிலையில் அந்த ஆலயத்தை பாதுகாக்கும் வகையில், சைவ மகாசபையினால் மகா சிவலிங்கம் ஒன்று அமைக்கப்பட்டு நேற்று சிவராத்திாி தினத்தில் பூசை வழி பாடுகளுடன் திறந்துவைக்கப்பட்டது, 