நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, March 3, 2019

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் இரண்டு மதத்தவரிடையேயான முறுகலால் பதட்டம்!


மன்னார் திருகேதீஸ்வரத்தில் நாளைய தினம் வருடாந்த சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வீதிகள் மற்றும் பலவிதமான சீரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.

   
   
   
 

அந்த வகையில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு செல்லும் வரவேற்பு வளைவு பல வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டதால் துருப்பிடித்திருந்தது.

அதனை மாற்றி புதிய வளைவு அமைக்கும் பணியில் சில தொண்டர்கள் இன்றைய தினம் (3) ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த மாற்று மத மக்கள் சிலர் அவ்விடத்தில் வளைவு அமைக்க விடாமல் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன் கோவிலுக்குள் உள்நுழையும் வளைவுகள் முழுவதையும் அடித்து நொறுக்கி பிடுங்கி எறிந்துள்ளனர்.


சம்பவம் பற்றி மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்ட போதும் ஒருவர் கூட சம்மந்தப்பட்ட இடத்துக்கு செல்லவில்லை எனவும் இருசாராருக்கும் இடையில் பிரச்சினை நடப்பதற்கு சற்று நேரத்தின் முன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அங்கிருந்து சென்றதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

   
   
   
  அதே நேரத்தில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட போதும் சம்பவம் நடந்து முடிந்த பின்னரே பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர் ஆனாலும் எவரும் கைது செய்யப்படவில்லை என அறிய முடிகின்றது

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரி கருத்து தெரிவித்த போது இந்த பகுதி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது. இதில் வளைவுகள் அமைப்பது சட்டப்படி குற்றம் என்றும் இந்த வளைவுகளை பிடுங்கி எறிந்தவர்கள் மீது பொலிஸ்’ நிலையத்தில் முறைப்பாடு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கூறி அனைவரையும் அவ்விடத்தில் இருந்து செல்லுமாறு தெரிவித்தார்.

இது சம்பந்தமாக கத்தோலிக்க மக்கள் கருத்து தெரிவிக்கையில் இந்த பாதை நீதிமன்ற வழக்கில் உள்ளதாகவும் கொங்ரீட் போட்டது தமக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறினார்கள்

இது சம்பந்தமாக திருக்கேதீஸ்வர ஆலயத்தின் நிர்வாகிகள் கருத்து தெரிவிக்கும் போது

   
   
   
  இந்த பாதைக்கு வழக்குகள் இல்லை பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட வளைவு துருப்பிடித்ததால் புதிதாக அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது இந்த செயலை செய்தார்கள். அடுத்தபடியாக இந்த வீதியில் வளைவு அமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரா சபையின் அனுமதிக்கடிதம் உள்ளதாக தெரிவித்த ஆலய நிர்வாகத்தினர் நாங்கள் கிறிஸ்தவர்களை மதிக்கின்றோம்.அவர்கள் எங்கள் இரத்த உறவுகள் அதனால் அவர்கள் எங்கள் கடவுளின் வளைவுகளை பிடுங்கிய போதும் அமைதியாக நின்றோம்.

இனக்கலவரத்தால் நம் தமிழ் சமூகம் பாரிய பின்னடைவையும் அழிவையும் சந்தித்தது உறவுகளுக்குள் மதக்கலவரத்தை நாம் விரும்பவில்லை என்று தெரிவித்தனர்.நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!