நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, March 15, 2019

நியுஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் நகரில் முஸ்லிம் பள்ளிவாயலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அறிக்கை !


 பிரதான சந்தேகநபர் அந்நாட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நியுசிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் உள்ள  முஸ்லிம் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்கதல்களில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.  இன்னும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபராக கருதப்படும் பிரேன்டன் டெரன்ட் என்பவரே இவ்வாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய பிரஜையாக கருதப்படும் இவர் 28 வயதுடையவர் எனவும் சிறைக் கைதிகள் அணியும் வெள்ளைநிற ஆடையில் காணப்பட்டதாகவும், விலங்கிடப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இவர் மீது படுகொலைக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

நீதிமன்ற வளாகத்துக்கு குறித்த சந்தேகநபர் விலங்கிடப்பட்டு அழைத்து வரும் போது அவரது கை விரல்களினால் வெள்ளையர்களின் சின்னத்தை அடையாளப்படுத்தி ஊடகங்களுக்கு காட்சிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது தன்னை விடுதலை செய்யுமாரோ, தனக்கு பிணை வழங்குமாரோ எந்தவித வேண்டுகோள்களையும் நீதிமன்றத்தில் முன்வைக்கவில்லையெனவும் குறிப்பிடப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவின் நிவ்சவுத்வெல்ஸில் பிறந்த இவர், அந்நாட்டின் உடற்பயிற்சி நிலையமொன்றில் ஆலோசகராக கடமையாற்றி வந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அந்நூர் பள்ளிவாயல் தாக்குதலுக்கு ஒரு சில மணி நேரத்துக்கு முன்னர் இணையத்தளத்தில் அறிவிப்பொன்றையும் இந்த சந்தேகநபர் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த பயங்கரவாதி வெளியிட்டுள்ள 74 பக்கங்களைக் கொண்ட  நீண்ட அறிக்கையில் பல தகவல்களை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!