நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, March 28, 2019

என் இனமே என் சனமே: முன்னாள் கடற்புலி வீரனின் குழந்தையைக் காத்திடுவீர்!

Thursday, March 28, 2019
Tags


வறுமையும் துன்பமும் வாழ்க்கையில் சகஜமானவையானாலும் இவை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டவர்களையே ஒறுத்துக்கொண்டிருப்பதுதான் பாழ்பட்ட விதியை சபிக்கவேண்டியியுள்ளது.

தாயகத்தில் இன்னமும் துன்பத்தின் பிடியிலிருந்து மீளாத மக்கள் அவல வாழ்க்கையினை வாழ்ந்துவருவது வேதனை தரக்கூடிய விடயமாகும்.

இங்கே மஞ்சள் காமலை நோயுடன் உயிருக்குப் போராடும் ஒன்றரை வயது குழந்தையும் அந்த குழந்தையினை காப்பாற்றுவதற்காக குடும்பமே திகைத்துப்போய் நிற்கும் நிலையும் நிஜமாக்கப்படுகிறது.

80லட்சம் ரூபா இருந்தால் மட்டுமே குழந்தையை காப்பாற்ற முடியும் என வைத்தியர்கள் கூறிவிட்ட நிலையில், அதை திரட்டுவதுற்கு போராடுகிறது இந்த முன்னாள் போராளிக் குடும்பம்.

யாழ் மாவட்டத்தில் வடமராட்சி மண்ணின் வல்வெட்டித்துறை பொலிகண்டியில் வசிக்கும் முன்னாள் போராளிக் குடும்பமமே இந்த அவல நிலையினை எதிர் நோக்கியுள்ளது.

சிறிய தொகை என்றாலும் தந்து உதவுங்கள் அதுவே பெரியதொரு தொகையாக மாறி என் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியும் என கண்ணீர் சிந்தும் நிலை கல்லையும் கரைக்கும் தன்மையதாகும். இதனை கீழுள்ள இணைப்பினைச் சொடுக்குவதன்மூலம் காணலாம்.

இவர்களுக்கு உதவிசெய்யும் தயாள உள்ளம்படைத்த நெஞ்சங்கள் +94212030600 எனும் இலக்கத்தை அழைப்பதன்மூலம் பெரும் அறப்பணியினை மேற்கொள்ளமுடியும்.