Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

ஞாயிறு, 3 மார்ச், 2019

நிற‍ைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் – பேச்சுவார்த்தைக்கு தயார் என்கிறார் மஹிந்த

  admin       ஞாயிறு, 3 மார்ச், 2019

நிற‍ைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயார் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

   
   
   
  நிற‍ைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்து எதிர்வரும் 6ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாட மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.

இந்தநிலையில் இதுதொடர்பாக கருத்து வெளியிடும் போதே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “நிற‍ைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பான பேச்சுவார்த்தையை மேற்கொள்ள மக்கள் விடுதலை முன்னணி அழைத்தால் அதில் கலந்துகொள்ள தயார்.

அத்துடன்,

   
   
   
  நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவது மாத்திரமின்றி தேர்தல் முறைமையிலும் மாற்றத்தை கொண்டுவர வேண்டியது அவசியமாகும்.

தேர்தல் முறைமையின் காரணமாக கடந்த தேர்தலில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. எனவே இந்த விடயத்திலும் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! நிற‍ைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் – பேச்சுவார்த்தைக்கு தயார் என்கிறார் மஹிந்த

Previous
« Prev Post