நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, March 30, 2019

டிப்பர் ரயர் வெடித்ததில் நடந்த துயரம்- ஒருவர் உயிரிழப்பு- இருவர் காயம்!!

Saturday, March 30, 2019
Tags

மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தின் முன்சில்லு ரயர் வெடித்ததில், முன்னால் கிடுகு ஏற்றிச் சென்ற இரு சக்கர உழவு இயந்திரத்துடன் மோதியது. அதில் பயணித்த ஒருவர் சாவடைந்தார். ஏனைய இருவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர்.


இந்த விபத்து இன்று அதிகாலை மட்டுவில் புதர்தூர் சாலையில் பன்றித்தலைச்சி அம்பாள் ஆலயத்தை அண்டிய ஆயத்தடியில் இடம்பெற்றுள்ளது.

டிப்பர் வாகனத்தின் ரயர் வெடித்ததில் முன்னால் சென்ற இரு சக்கர உழவு இயந்திரத்துடன் மோதியுள்ளது. இதனால் வாகனம் பலத்த சேதமடைந்ததுடன் டிப்பர் வாகனமும் தடம்புரண்டது.

லான்ட் மாஸ்டர் வாகனத்தின் சாராதியே உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.