நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, March 14, 2019

யாழில் ‘கஞ்சா கேஸில்’ சிக்கியவர் ஜெனீவாவில் புலிகளிற்கு எதிராக சாட்சியமளிக்க அழைத்து செல்லலப்படுகிறார்..!!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சார்பில் சாட்சியமளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குழுவில், கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ள நபர் ஒருவரையும் ஏற்பாடு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

  அண்மைநாட்களில், தென்னிலங்கை தொலைக்காட்சிகளில் தன்னை ஆவா குழு ரௌடியாக அடையாளப்படுத்தியபடி, சர்ச்சைகளிற்காக பொருத்தமற்ற விதமாக பேசிய அருண் என்ற நபரையே, ஜெனீவா அழைத்து செல்ல முயற்சிக்கப்படுவதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக விசா விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி நபரின் தாயாரின் சகோதரர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பில் செயற்பட்டபோது, விடுதலைப்புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்ததாகவும், இதனடிப்படையிலேயே, விடுதலைப்புலிகளிற்கு எதிராக சாட்சியமளிக்க இந்த நபர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
   
யார் இந்த நபர்?

அருண் என்ற மேற்படி நபர் மீது யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. யாழ்ப்பாணம் காக்கைதீவு பகுதியில் கேரள கஞ்சாவுடன் கைதானதாக குறிப்பிட்டு, யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் பொலிசார் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விவகாரத்தில் 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னரே, இந்த நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

ரஷ்யாவில் மருத்துவம் கற்றுவிட்டு, பாதியிலேயே நாட்டுக்கு திரும்பிய இந்த நபர், பின்னர் கொழும்பு ஊடகமொன்றில் பணிபுரிந்தார்.

2012இல் குமார் குணரட்ணத்தின் முன்னிலை சோசலிச கட்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது, மீண்டும் திருமணமாகி வசித்து வருகிறார். கஞ்சாவுடன் சிக்கி சிறையிலிருந்த சமயத்திலேயே ஆவா குழு ரௌடிகளுடன் தொடர்பேற்படுத்தினார்.

  தமிழ் சமூகத்திற்கு ஆலோசனையும், வழிகாட்டலும் கூறும் இந்த நபர், 2017இல் காக்கைதீவு பகுதியில் கஞ்சாவுடன் பிடிபட்டதாக பொலிசார் குறிப்பிடுகின்றனர். யாழ் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இப்பொழுதும் உள்ளது. 2017.03.09 jaffna mc court 292/17 என்பது வழக்கு இலக்கம்.

சமூகத்தில் மோசமான குற்றச்செயலான போதைப்பொருள் விவகாரத்தில் கைதான ஒருவரை, மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பாவிக்க முயல்வது விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

விடுதலைப்புலிகள் தமது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்தார்கள் என்பதே இந்த நபரின் வாக்குமூலமக இருக்குமென தெரிகிறது.

அவர் மேல் நிலுவையிலுள்ள போதைப்பொருள் வழக்கை கவனத்தில் கொண்டு, அவரது சுவிஸ் விசா நிராகரிக்கப்படுமா என கேள்வியும் எழுந்துள்ளது.