நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, March 30, 2019

பிள்ளையாரை அவமதித்த பிக்குவுக்கு புற்றுநோய்!!

Saturday, March 30, 2019
Tags


முல்­லைத்­தீவு செம்­ம­லை­யில் இருந்த பாரம்­ப­ரிய பிள்­ளை­யார் ஆல­யத்­தில் சட்­ட­வி­ரோ­த­மான முறை­யில் பௌத்த விகா­ரையை நிறு­வி­யுள்­ளார் என்­றும் இத­னால் தமிழ் மக்­க­ளின் வழி­பாட்டு உரிமை கேள்­விக்­குள்­ளாக்­கப்­ப­டு­கி­றது என்­றும் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட பிக்கு புற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்டுள்­ளார்.

செம்­மலை ஆல­யத்­தில் கடந்த ஜன­வ­ரி­மா­தம் ஏற்­பாடு செய்­யப்­பட்ட பொங்­க­லின்­போது அங்­கு­வந்த பிக்­கு­க­ளால் இடம்­பெற்ற பிணக்­குத் தொடர்­பில் பொலி­ஸா­ரால் தாக்­கல் செய்­யப்­பட்ட வழக்கு நேற்று முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­வான் நீதி­மன்­றத்­தில் நீதி­பதி எஸ்.லெனின்­கு­மார் முன்­னி­லை­யில் தீர்ப்­புக்­காக எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

சட்­ட­வி­ரோ­த­மாக விகாரை அமைத்­தார் என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்ட பிக்­கு­வுக்­குப் புற்­று­நோய் ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும், அத­னால் மன்­றில் முன்­னி­லை­யாக முடி­ய­வில்­லை­யென்­றும் பிக்­கு­வின் சார்­பில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ர­ணி­யால் மன்­றுக்கு மருத்­துவ அறிக்கை வழங்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து தீர்ப்பு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

நாயா­றி­லுள்ள நீரா­விப்­பிட்டி பிள்­ளை­யார் ஆல­யத்தை சட்­ட­வி­ரோ­த­மாக ஆக்­கி­ர­மித்த பௌத்த பிக்கு அங்கு குரு­கந்த ரஜ­மஹா விகா­ரை­யென்ற பெய­ரில் மிகப்­பெ­ரிய விகா­ரையை அமைத்­தி­ருந்­தார். அது தொன்­மை­யான பௌத்த வழி­பாட்­டி­டம் என்­றும் உரிமை கொண்­டா­டி­னார். அது தொடர்­பான வழக்கு முல்­லைத்­தீவு நீதி­மன்­றில் நடை­பெற்­று­வ­ரு­கி­றது. வழக்கு விசா­ர­ணை­யின் போது, அந்த இடத்­தில் 2 ஆயி­ரம் வரு­டங்­கள் பழ­மை­யான விகாரை, யாத்­தி­ரி­கர் மடம் இருந்­தன என்று தொல்­லி­யல் திணைக்­க­ளப் பணிப்­பா­ளர் தெரி­வித்­தி­ருந்­தார்.

கடந்த தைப்­பொங்­கல் தினத்­தில் பிர­தே­ச­மக்­கள், நீரா­விப்­பிட்­டிப் பிள்­ளை­யா­ருக்கு பொங்­க­லிட்­ட­போது, பௌத்த பிக்கு அடா­வ­டி­யாக செயற்­பட்­டார். இதை­ய­டுத்து, இந்த பிணக்கு தொடர்­பாக பொலி­சார் முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­மன்­றில் மற்­று­மொரு வழக்­கும் தொடர்ந்­தி­ருந்­த­னர். அந்த வழக்­கின் தீர்ப்பே நேற்று வழங்­கப்­ப­ட­வி­ருந்­தது. பிக்கு மன்­றில் முன்­னி­லை­யா­கா­ததை அடுத்து தீர்ப்பு ஏப்­ரல் 22ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.