நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, March 3, 2019

வறுமையை போக்கும் திட்டங்களுடன் வரவு செலவு திட்டம் இறுதி வடிவம் பெற்றது!

Sunday, March 03, 2019
Tags

ஐக்கிய தேசிய கட்சியின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் இறுதி நிலையை எட்டியுள்ளது.

   
   
   
  2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பு ஏப்ரல் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அது இறுதி வடிவம் பெற்றுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த வரவு செலவுத்திட்டத்தில் வறுமை நிலையில் உள்ள மக்களை மேம்படுத்துவது தொடர்பான பல திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் கூறியுள்ளார்.

அத்தோடு தனது பணிக்கு உதவிய மனோ தித்தவெல்ல மற்றும் டெஸ்ஹால் டி மெல் ஆகியோருக்கு தனது நன்றிகள் என அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதி வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்தோடு வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு மார்ச் 6 ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இடம்பெறும்.

   
   
   
 

மார்ச் 13ஆம் திகதி முதல் ஏப்ரல் 5 ஆம் திகதி வரை வரவு செலவு திட்ட குழுநிலை விவாதம் இடம்பெறும். தொடர்ந்தும் அன்றைய தினம் வரவு செலவு திட்டம் தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.