நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, March 27, 2019

பயங்கரவாத இயக்கமான புலிகள் வழங்கிய கட்டடம், காணியை கோர முடியாது: ஆளுனர்!

Wednesday, March 27, 2019
Tagsதடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் வழங்கிய கட்டடம் மற்றும் காணியை மீளவும் கோர முடியாது என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

2009 முதல் தாங்கள் பயன்படுத்திய ஊடக இல்ல கட்டடத்தையும் காணியையும் மீளவும் பெற்றுத் தருமாறு கிளிநொச்சி ஊடக அமையம் சார்பில், இன்று (27) கிளிநொச்சியில் இடம்பெற்ற ஆளுநரின் மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கோரிக்கை விடுத்த போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“ஊடக இல்லத்தின் காணியையும் கட்டடத்தையும் இராணுவம் இதுவரை விடுவிக்காமைக்கான காரணத்தை கண்டறியுங்கள்.  நோய்க்கான காரணத்தை கண்டறிந்தால்தான் நோயை தீர்க்க முடியும். எனவே இராணுவத்திடம் சென்று ஏன் விடுவிக்கவில்லை என்று கேட்டறியுங்கள். காணிக்கான ஆவணங்கள் என்ன இருக்கிறது் என்று கேள்வியெழுப்பினார்.


 
இதற்கு பதிலளித்த ஊடக அமையத்தின் நிர்வாகம், இறுதி யுத்தத்தில் பொது மக்கள் தங்களது உயிர்களை பாதுகாக்க முடியாத சூழல் காணப்பட்டது. பெரும்பாலான பொதுமக்கள் தங்களின் சொந்த ஆவணங்களை கூட இழந்திருந்தனர். எனவே நாமும் குறித்த காணிக்கான ஆவணத்தையும் இழந்திருந்தோம். அத்தோடு அன்றைய சூழலில் விடுதலைப்புலிகள் நிர்வாகத்தில் குறித்த கட்டடம் ஊடக இல்லமாக கிளிநொச்சி ஊடகவியலாளர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதனை சுட்டிக்காட்டிய போதே ஆளுநர் தடை செய்யப்பட்ட இயக்கம் வழங்கியதை மீளவும் கோர முடியாது என பதிலளித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக ஆளுநரிடம் கிளிநொச்சி ஊடக அமையத்தின் தலைவர் க. திருலோகமூர்த்தி, செயலாளர் மு.தமிழ்ச்செல்வன் ஊடகவியலாளர்கள் சிலரும் கலந்துகொண்டு தங்களது கோரிக்கையை எழுத்து மூலம் முன் வைத்திருந்தனர்.