நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, March 29, 2019

நான் யாழ்ப்பாணத்தில் இருந்திருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் ஒரு தலைவராக இருந்திருப்பேன்

Friday, March 29, 2019
Tagsநான் யாழ்ப்பாணத்தில் இருந்திருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் ஒரு தலைவராக இருந்திருப்பேன் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தன்னிடம் கூறினார் என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிற்கு முன்னதாக தனது ஊடக அனுபவம் குறித்து ஊடகவியலாளர்களுடன் பேசும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார் என தமிழ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நான் ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையில் நேர்காணல்கள் பலவற்றைச் செய்துள்ளேன், அந்த சமயம் யாருக்கும் நேர்காணல் வழங்காத அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல எனக்கு நேர்காணல் வழங்கியிருந்தார். 20 நிமிடங்கள் என்று ஒதுக்கி ஆரம்பித்த நேர்காணல் 49 நிமிடங்கள் வரை நீடித்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதன்போது, தான் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து இருந்திருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து அதன் தலைவராக வந்திருப்பேன் என்று என்னிடம் கூறினார் என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் மேலும் தெரிவித்துள்ளார்.