நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, March 14, 2019

மசூத் அசார் விடயத்தில் சீனாவைத் தவிர்க்க யோசிக்கும் ஐ.நா. உறுப்பு நாடுகள்


மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ள நிலையில், ஐ.நா. பாதுகாப்புச் சபையின் ஏனைய உறுப்புநாடுகள் மாற்று நடவடிக்கைக்கு யோசித்து வருகின்றன.

புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியன தீர்மானம் கொண்டுவந்தன.

   
   
   
  ஆனால் இத்தீர்மானத்தை ஆராய்வதற்கு மேலும் அவகாசம் வேண்டும் எனக்கூறி கடைசி நேரத்தில் சீனா தடுத்துவிட்டது. இதன் காரணமாக குறித்த தீர்மானத்தை 9 மாதங்கள் வரை கிடப்பில் போட முடியும். மசூத் அசார் விவகாரத்தில் 4ஆவது முறையாக இந்நடவடிக்கையை சீனா மேற்கொண்டுள்ளது.

ஐ.நா. பாதுகாப்புச் சபையின் விதிமுறைகள் அனைத்தும் மசூத் அசாருக்குத் தடை விதிக்கப் பொருந்தும் என அமெரிக்கா கூறியது. பிராந்திய அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடாது எனவும் எச்சரித்தது.

   
   
   
  இப்போது மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா முட்டுக்கட்டை போட்டிருப்பதை ஏற்கமுடியாது என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பிராட் ஷெர்மன் கூறியுள்ளார்.

இதற்கிடையே, சீனா இப்படி தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தால் பாதுகாப்புச் சபையின் ஏனைய உறுப்பு நாடுகள், வேறு நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாய நிலை உருவாகும் என பெயர் குறிப்பிட விரும்பாத பாதுகாப்புச் சபை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்விடயத்தில் சீனாவைத் தவிர்த்து மசூத் அசாருக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள உறுப்பு நாடுகள் யோசிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!