நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, March 2, 2019

கிளிநொச்சி தாக்குதல் சம்பவம்: ஊடகவியலாளர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஸ்ரீதரன்


கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் போராட்டத்தின்போது ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட விவகாரத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் மன்னிப்பு கோரியுள்ளார்.

   
   
   
  கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தில் தமது தரப்பில் தவறு இடம்பெற்றுள்ளமையை ஏற்றுக்கொண்டு அவர் பகிரங்க மன்னிப்பை தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் குறிப்பிடுகையில், “கடந்த 25ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டத்தில் சில பிரதேசசபை உறுப்பினர்களும், மேலும் சில உறுப்பினர்களும் நடந்து கொண்ட விதம் குறித்து செய்திகள், காணொளிகள் ஊடாக நாம் பார்த்தோம்.

அதன் படி இச்சம்பவம் பற்றி நாம் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த உறுப்பினர்கள் அன்று நடந்து கொண்டமை தவறு என்பதை கண்டறிந்தோம். இதன்படி அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அன்று அவர்கள் இவ்வாறு பத்திரிகையாளர்களுடன் நடந்துகொண்ட விதம் குறித்து நான் பகிரங்கமாக மன்னிப்பு கோருகின்றேன்” என்று தெரிவித்தார்.

   
   
   
  இதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திய போராட்டத்தில் முன்னாள் போராளி ஒருவரை அங்கிருந்த  கமெராக்காரர் ஒருவர் கீழே தள்ளி விழுத்தியதாகவும்,  வீழ்ந்தவரை தமது ஆதரவாளர்கள் தூக்கச் சென்றபோதே சர்ச்சை ஏற்பட்டது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.


நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!