நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, March 13, 2019

பிரேசிலில் உள்ள பாடசாலை ஒன்றில் சற்று முன்னர் கொடூரமான துப்பாக்கிச் சூடு – பல மாணவர்கள் உயிரிழப்பு!

பிரேசிலில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்னர்.

  இரு இளைஞர்கள் இன்று (புதன்கிழமை) அதிகாலை சுஸானோவில் உள்ள பாடசாலை வளாகத்திற்குள் நுழைந்து சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திலேயே இவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களில் ஐந்து மாணவர்களும் கட்டிடத்தில் வேலை செய்த முதியவர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு துப்பாக்கிச் சூட்டை நடத்திய இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். மேலும் சம்பவத்தில் காயமடைந்த பல மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

  மேலும் துப்பாக்கிச் சூட்டில் பாடசாலை மாணவர்கள் “கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்”. என சாவோ பாலோ மாநில ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோவா டோரியா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.