நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, March 3, 2019

நான் ஒரு கிறிஸ்தவன் திருக்கேதீஸ்வரம் என்பது ஓர் புகழ்பெற்ற புனித ஸ்தலம் !

Sunday, March 03, 2019
Tagsதிருக்கேதீஸ்வரம் என்பது ஓர் புகழ்பெற்ற புனித ஸ்தலம் நான் ஒரு கிறிஸ்தவன் தான் ஆனால் பைபிளில் எங்கும் கூறவில்லை அடுத்த மதத்தை இழிவு படுத்த சொல்லி அதேவேளை 1505 ம் ஆண்டு இலங்கைக்கு போர்த்துக்கீசர் வந்திருக்காவிட்டால் இன்று இலங்கையில் சைவர் மாத்திரமே இருந்திருப்போம் என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை 

   
   
   
  பைபிளின் இறுதி நூலான திருவெளிப்பாடு எனும் நூலில் குறிப்பிட்டுள்ளது எதிர்காலத்தில் நடப்பதை பற்றி அதில் முக்கியமாக கடவுளின் பிள்ளைகள் என கூறப்பட்டுள்ளது ஸ்ரேயேல் நாட்டாரை மாத்திரமே ஆசியா உட்பட ஏனைய மக்களை அந்நியர்கள் என்றே குறிக்கப்பட்டுள்ளது எனவே நாம் கிறிஸ்தவர்களாக இயேசு நாதரை ஏற்றுக்கொண்டாலும் பைபிளின் படி நாம் அந்நியர்களே என்பது எனது கருத்து 

இதேவேளை இன்னும் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன் திருக்கேதீஸ்வரம் செல்லும் நான்கு வழிபாதையிலும் கிறிஸ்தவ மதத்திற்கான சிலைகள் நிறுவப்பட்டுள்ளது தவறு இங்குதான் ஆரம்பிக்கப்பட்டது புனித ஸ்தலத்திற்கு செல்லும் அனைத்து வழிகளிலும் கிறிஸ்தவ சிலைகளை வைத்தது யார் ? மடு தேவாலயம் என்பது கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலம் அங்கு செல்லும் வழிகளில் சைவ சிலைகளை வைக்க விடுவார்களா..? 

இது எமது இனத்தை நாமே படுகுழிக்குள் இட்டு செல்கிறோம், சில தீய சக்திகள் தூண்டுகின்றன என்பது தெட்ட தெளிவாக தெரிகிறது 
எமது இனத்தை பொறுத்தவரையில் எமக்கு எந்நேரமும் ஏதோ ஓர் பிரச்சினை இருக்க வேண்டும் போல் தான் தெரிகிறது இது பெரும் சாபக்கேடு 

ஆசியாவை ஆண்ட தமிழன் என கூறும் எமக்கு தனி நாடு இல்லை அதிலேயே தெளிவாகிறது எமது இனத்துக்கு ஓர் சாபககேடு உண்டு என்று
 
ஈழத்தை பொறுத்தவரையில் அறுபதுவருட உரிமை போராட்டம் அதும் மெளனிக்கப்பட்ட பின் இப்பொழுது பிரதேசவாத பிரச்சினை கிழப்பிக்கொண்டு ஒரு கூட்டம் மத பிரச்சினையை தூண்டிக்கொண்டு ஒரு கூட்டம் அடுத்து என்ன சாதி சண்டை தான் அதுவும் சில இடங்களில் ஆரம்பித்து விட்டது போல் தான் தெரிகிறது

   
   
   
  எனவே கடந்த காலங்களில் சிங்களம் தமிழ் என மோதிக்கொண்டு இன்னும் ஒரு இனத்தை வளர விட்டோம் இன்றும் அதையே தான் செய்கிறோம் எமக்குள் நாமே மோதிக்கொண்டு இருக்கும் தமிழர் பாரம்பரியத்தையும் இருப்புக்களையும் இழக்க போகிறோம் என்பதில் ஐயமில்லை
யார் தூண்டுகிறார்கள் இதன்பின்புலம் என்ன என்று ஆராய்ந்து நிச்சயமாக தடுத்தி நிறுத்த வேண்டும் 
தமிழால் ஒன்றினைவோம்
நன்றி