onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Monday, March 11, 2019

கூட்டமைப்பு ஜனநாயகத்தை பாதுகாத்தது – அப்துலா மஹ்ரூப்

  admin       Monday, March 11, 2019


தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனநாயகத்தை பாதுகாக்க பெரிதும் உதவியது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

   
   
   
  வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று இன்று(திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துலா மஹ்ரூப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “நாட்டில் ஜனநாயகம் கேள்விக்குறியான சந்தர்ப்பத்தில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த பல கட்சியிகள் போராடின.

குறிப்பாக சிறுபான்மை கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக போராடின. நீதிமன்றம் வரை சென்று ஜனநாயக்தை உறுதிப்படுத்தின.

   
   
   
  இதற்காக நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மையின கட்சிகளுக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். அதேபோன்று சிறுபான்மையின மக்களின் ஆதரவின்றி எவராலும் ஜனாதிபதியாக முடியாது“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கூட்டமைப்பு ஜனநாயகத்தை பாதுகாத்தது – அப்துலா மஹ்ரூப்

Previous
« Prev Post