onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Monday, March 11, 2019

ஜே.வி.பி- கூட்டமைப்பு சந்திப்பு!

  admin       Monday, March 11, 2019

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜேவிபிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (11) மாலை கொழும்பில் இடம்பெறுகிறது.

   
   
   
  பத்ரமுல்லையில் அமைந்துள்ள ஜேவிபியின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்று வருகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மாவை. சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

ஜே.வி.பி சார்பில் அனுரகுமார திசநாயக்க, ரில்வின் சில்வா, கே.டி.லால்காந்த ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

20வது திருத்தம் தொடர்பில் இதில் ஆராயப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

   
   
   
  20வது திருத்தம் தொடர்பில் ஜே.வி.பி முன்னெடுக்கும் முயற்சிகளிற்கு மஹிந்த ராஜபக்ச ஆதரவளிப்பதிலிருந்து பின்வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ஜே.வி.பி- கூட்டமைப்பு சந்திப்பு!

Previous
« Prev Post