நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, March 14, 2019

யாழ்ப்பாணம் -கொழும்பு அதிகாலையில் புதிய ரயில் சேவை விரைவில்.

யாழ்ப்பாணத்துக்கும்- கொழும்புக்குமிடையில் மற்று மொரு புதிய  ரயில் சேவை மேற்கொள்வதற்கு திட்ட மிடப்பட்டு வருவதாக புகையிரத திணைக்கள வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது
   
 அதாவது தற்போது கொழும்பு கோட்டையிலிருந்து தினந்தோறும் பிற்பகல் 3.50 மணிக்கு வவுனியா நோக்கி பயணிக்கும் ரயிலை யாழ்ப்பாணம் வரை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டு வருகின்றது. மேற்படி ரயில் தற்போது வவுனியாவை இரவு 10 மணிக்கு வந்தடைகின்றது. 

 இந்த ரயில் பின்னர்  காலை 5.45 மணிக்கு வவுனியாவிலிருந்து புறப்பட்டு முற்பகல் 11 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை சென்றடைகின்றது.

  இவ்வாறான நிலையில் புதிய ரயில் சேவை காங்கேசந்துறையில் இருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்படுவதற்கு திட்டமிடப்படு வருவதாக தெரியவருகின்றது.