நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, March 17, 2019

பருத்தித்துறையில் ஒரு கோடி 33 லட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது – சம்பவம்


“பருத்தித்துறை திக்கம் பகுதியில் சுமார் ஒரு கோடியே 30 லட்சம் பெறுமதியான 88 கிலோ 76 கிராம் எடையுடைய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. அதனை கடத்த முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டில் அதே இடைத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் கடற்படையினரும் முன்னெடுத்த நடவடிக்கையிலேயே இந்த கேரள கஞ்சா கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் போதைப் பொருள் தடுப்பு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடற்படையினரும் இணைந்து பருத்தித்துறை திக்கம் பகுதியில் கடத்தலுக்கு தயாராகவிருந்து நிலையில் 88 கிலோ 76 கிராம் நிறையுடைய கேரள கஞ்சா பொதிகளைக் கைப்பற்றினர்.

அதன்பெறுமதி ஒரு கோடியே 33 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதனைக் கடத்த முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இருவரும் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், சான்றுப்பொருளும் கையளிக்கப்பட்டது” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!