நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, March 27, 2019

அனைத்து வீடுகளிலும் 2 மின் விளக்குளை அணைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.

Wednesday, March 27, 2019
Tags


மின்சார பற்றாக்குறைக்கு முகங்கொடுப்பதற்காக பின்பற்ற வேண்டிய சில விடயங்கள் உள்ளிட்ட 
அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த யோசனைகே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் கீழே.

எதிர்வரும் மூன்று மாதக் காலப்பகுதியினுள் அனைத்து வீடுகளிலும் , இரண்டு மின் விளக்குகள் அணைக்கப்பட வேண்டும்.

அரச நிறுவனங்கள் , சமய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் மின்சாரப் பாவனையை நூற்றுக்கு 10 சதவீதமாக குறைத்தல் .

அத்தியாவசியமற்ற மின் விளக்குகளை அணைத்தல்.

சாதாரண தினங்களில் வீதி மின் விளக்குகள் அணைக்கப்படும் நேரத்திற்கு ஒரு மணித்தியாலயத்திற்கு முன்னரே அனைத்து வீதி மின் விளக்குகளையும் அணைத்தல்.

இதற்கமைய ,  தற்போதைய மின்சார நுகர்வுடன் ஒப்பிடுகையில் மின் உற்பத்தி சவாலாக அமைந்துள்ளதாக குறித்த யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி , மின்சார உற்பத்தி வழமைக்குத் திரும்பும் வரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களை அறிவுறுத்த அரசாங்கத்தின் அவதானம் திரும்பியுள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.