நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, March 9, 2019

காலி கராப்பிட்டி வைத்தியசாலையில் 23நாள் குழந்தை பால் புரையேறுதலினால் உருவான இறப்பை சிங்கள வைத்தியர் தமது அனுபவத்தை பகிர்ந்தது எமது நண்பர்களுக்காக !!!!!

Saturday, March 09, 2019
Tags


காலி அம்பலாங்கொடையில் 23வயது சுனித்தா இளம் தாயிற்கு பிறந்த 
23 நாட்களே சிசுவை  தள்ளாடுகின்ற வயதுப் பெண் தூக்கிவர, பின்னால் அழுது புலம்பிய படி வந்த அக்குழந்தையின் தாய்,
   
   
   
  "டொக்டர், எனது பிள்ளை மூச்செடுப்பதில்லை... என் பிள்ளையைக் காப்பாத்துங்க டொக்டர்..." என்றாள்.  அவளது நடையும் நடத்தையும் அவளது உடல் மற்றும் உள வலியைக் காட்டி நின்றது. பிள்ளையைப் பிரசவித்த வலி ஓயுமுன் இன்னோர் உளவலி அவளை வாட்டிக் கொண்டிருந்தது...

தொப்புள்கொடி கூடக் காயாத அக்குழந்தையைச் சோதித்த போது அது இறந்து விட்டது உறுதியானது. வாயிலிருந்து வெள்ளை நிறத்திரவம் வழிந்து கொண்டிருக்க, அதன் கழுத்து மற்றும் நெஞ்சுப்பகுதி வாந்தியால் நனைந்திருந்தது...

பால் கொடுத்து விட்டு மல்லாந்து தூங்க வைத்த குழந்தை அழுது கொண்டு வாந்தியெடுத்த நிலையில் இருமிக்கொண்டிருப்பதைக் கண்ட தாய் ஓடிவந்து பார்க்க, குழந்தை மூச்சுத் திணறி அவதிப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டாள்.
முதலுதவி பற்றி ஏதுமறியா அத்தாய் உடனே வைத்தியசாலைக்கு வந்தாள்.

இளங்குழந்தைகளுக்கு வாந்தி வருகின்ற போது அதை எப்படி வெளியே விடுவது, அதனாலேற்படுகின்ற சிக்கல்களை எவ்வாறு தவிர்த்துக் கொள்வது போன்ற அறிவு இல்லாததாலும் அதற்கேயுரிய தெரிவினைகள் சரியாக விருத்தியடையாததாலும் புரைக்கேறுதல் இலகுவில் நிகழ்கிறது. புரைக்கேறல் என்பது வாய் மற்றும் தொண்டைப் பகுதியிலிருக்கும் பதார்த்தங்கள் மூச்சுக்குழல் வழியாக நுரையீரல்களுக்குச் செல்வதாகும். சாதாரணமாக உணவை விழுங்கும் போது மூச்சுக்குழல் தானாக மூடிக்கொள்ள அவ்வுணவு உணவுக்கழாயூடாக இரைப்பையை அடையும். மூச்சு விடும்போது மாத்திரமே மூச்சுக்குழாய் திறக்கப்படும்.

இக்குழந்தை மல்லாந்து படுத்திருக்கையில் வாந்தியெடுத்தது. மல்லாந்து இருந்ததால் வாய் மற்றும் தொண்டைப் பகுதியில் வாந்தி தேங்கிவிட்டது. கூடவே குழந்தை (தெரியாமையால்) மூச்செடுக்க மூச்சுக்காற்றோடு வாந்தியும் மூச்சுக்குழாயை அடைந்ததும் தெரிவினையாக இருமல் வந்தது, மூச்சுக்குழாய் வாந்தியால் மூடிப்பட மூச்சுத்திணறல் வந்து குழந்தை அழுதது. அழும் போது மேலும் வாந்தி மூச்சுக்குழாயை அடைய மேலும் அது மூடிக்கொண்டது. ஈற்றில் பிள்ளை கண்களை மூடிக்கொண்டது.

   
   
   
  தன்னைத் தப்ப வைக்கும் கைங்கரியம் குழந்தைக்குத் தெரியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமாயினும் இது போன்ற நிலையில் தன் குழந்தையைக் காப்பாற்றத் தாய்க்குத் தெரியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது! 

வாந்தியெடுத்தல், பால் கொடுக்கும் போது குழந்தை விழுங்காது தூங்குதல், வாயில் உமிழ்நீரோ அல்லது பாலோ தேங்குதல் போன்ற சந்தர்ப்பங்களில் புரைக்கேறுதலுக்கான வாய்ப்பு அதிகமென்பதால், உடன் பிள்ளையை மல்லாந்து படுக்க விடாமல் பக்கவாட்டில் அல்லது முகங்குப்புறப் படுக்க விடுதல் வேண்டும். இதன் போது வாய் மற்றும் தொண்டையின் உள்ளடக்கங்கள் வாயினூடாக வெளியேறுவதால் புரைக்கேறல் தடுக்கப்படும்.
ஏதாவது சிறிய போருட்கள் வாயினுள் சென்று தொண்டையை/மூச்சுக்குழாயை அடைக்குமாயின், தங்களது இடது உள்ளங்கையை குழந்தையின் நெஞ்சில் வைத்துக் குழந்தையை முகங்குப்புற குழந்தையின் தலை உடல் மட்டத்திற்குச் சிறிது கீழாக இருக்கும் படி உள்ளங்கை மேல் படுக்க வைத்துத் தூக்கி வலது கையால் குழந்தையின் முதுகில் தட்டிச் செய்யும் இம்முதலுதவியினால் அப்பொருட்கள் உட்செல்வதைத் தடுத்து மூச்சடைப்பைத் தடுக்க முடியும். (கீழுள்ள படத்தைப் பார்க்கவும்)

   
   
   
  இவ்வாறான சிறுகுழந்தைகளின் தடுக்கப்படக்கூடிய மரணங்களுக்குக் காரணம் குழந்தையோடிருக்கும் பெரியவர்களே என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. 

எனவே பலதையும் இலகுவில் வீட்டலிருந்தே அறிந்து கொள்ளக்கூடிய வசதிகளிருக்கும் இக்காலத்தில் இது போன்ற சில முதலுதவிகளை அறிந்து தேவையான போது அவற்றைப் பிரயோகிப்பதன் மூலம் தங்கள் பெறுமதியான குழந்தைச் செல்வங்களைப் பாதுகாத்திடுவோம்.