நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, March 5, 2019

2019 வரவு செலவு திட்டம்: முழுமையான உள்ளடக்கம்!


2019ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார் நிதியமைச்சர் மங்கள சமரவீர.

   
   
   
  பிற்பகல் 2.08 மணிக்கு நிதியமைச்சர் வரவு செலவு திட்ட உரையை ஆரம்பித்தார்.

வரவு செலவு திட்ட சட்டமூலத்தின் மீதான விவாதம், சனிக்கிழமை உட்பட, 26 நாள்களுக்கு காலை முதல் இடம்பெறும். மார்ச் 12ஆம் திகதி வரையிலும் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதமும், இடம்பெறும், அன்றிலிருந்து ஏப்ரல் 5ஆம் திகதி வரையிலும் அமைச்சுகள் மீதான விவாதமும் இடம்பெற்று, அன்றையதினம் மாலை 6 மணிக்கு இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும் வரையிலும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சகலரும் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதிக்கான ஒதுக்கீடுகளை தோற்கடிக்கும் முயற்சியொன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்.பிகள் முயற்சித்து வருகின்றனர் என்பதால், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அன்றையதினம் கட்டாயமாக அவையிலிருக்க வேண்டுமென ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அறிவுறுத்தியுள்ளது.

வரவு செலவு திட்ட உரையை ஆரம்பித்த மங்கள, கடந்தாண்டு அரசியல் சூழ்ச்சியால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதாகவும், பொருளாதாரத்தை நிலையான நிலைக்கு கொண்டு செல்ல முடியாமல் போய்விட்டதாகவும் தெரிவித்தார். இலங்கைக்கு கிடைக்கவிருந்த பல கடன் திட்டங்கள் கிடைக்காமல் போனதாகவும் தெரிவித்தார்.

   
   
   
  2019 வரவு செலவு திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த நடவடிக்கை. இதன் மூலம் கடன் வசதிகளை வழங்க நடவடிக்கை

சிறிய மற்றும் மத்திய தர வர்த்தகர்களை ஊக்குவிக்க நடவடிக்கை.

விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்க 250 பில்லியன் ஒதுக்கப்படும். அநுராதபுரம், குருநாகல், புத்தளம், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் விவசாய நடவடிக்கை மேம்படுத்தப்படும்.

இறப்பர் உற்பத்திக்கு 800 மில்லியன் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தெங்கு உற்பத்தியை அதிகரிக்கவும் தெங்கு உற்பத்தியில் ஈடுபடுவோரை ஊக்குவிக்க நடவடிக்கை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைத் தொடர்பில், தேயிலை சபையுடன் கலந்துரையாடி விரைவானத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை.

தேசிய இளைஞர் சேவைகள் சபையின் உறுதிப்படுத்தப்பட்ட பயனாளிகளிகளுக்கு என்டபிரைஸஸ் கடன் திட்டத்தை பெற்றுக்​கொடுக்கும் போது முக்கியதுவம் வழங்கப்படும். இதுவரை 60,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கறுவாப்பட்டையை ஏற்றுமதி செய்யும் வகையில், அத்தொழில் துறையை ஊக்குவிப்பதற்கு 75 மில்லியன் ரூபாய் ஒதுக்க நடவடிக்கை.

புகையிரத நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு அவை தனியாருக்கு நிர்வகிக்க கொடுக்கப்படும்.

100,000 க்கு மேற்பட்டோருக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. மொனராகலையில் மாத்திரம் 35,000 குடும்பங்களுக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. கடந்த அரசாங்கம் இதனை கவனிக்கவில்லை. இந்த வருடம் சகலருக்கும் கழிப்பறை வசதிகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் 4 பில்லியன் ஒதுக்கீடு.

நாட்டில் சகல பாடசாலை மாணவர்களுக்கும் ஒரு கோப்பை பால் இலவசமாக வழங்கப்படும்

   
   
   
  மீன் ஏற்றுமதி மூலம் 209 மில்லியன் ரூபாய் இலாபம் வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது.

சிறுநீரக நோயாளர்களுக்கு 1800 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

மொரகாகந்த, களுகங்கை திட்டங்களை அடுத்தாண்டு நிறைவு செய்ய எதிர்பார்ப்பு.

அங்கவீனமுற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையை 3,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை

25 வருடங்களில் செலுத்தக் கூடிய வகையில் 6 சதவீத வட்டி அடிப்படையிலான இலகுக் கடன் திட்டங்களை இளம் ஜோடிகளுக்கு வழங்க நடவடிக்கை

சிறைச்சாலை திணைக்களத்துடன் இணைந்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டவர்களை அதிலிருந்து மீட்கும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்

வடக்கு கிழக்கு ஆகிய பகுதிகளில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். அத்துடன் அங்குள்ள மக்களுக்காக வீடமைப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க 24 பில்லியன் ஓதுக்கீடு

வடக்கில் முஸ்லிம்களை மீள் குடியமர்த்த நடவடிக்கை.

வெளிநாட்டில் தொழில்புரிவொருக்கு சீனமாளிகா கடன் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

250 க்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களில் சிறுவர் பாதுகாப்பு மத்திய நிலையத்தை அமைக்கும் தனியார் நிறுவனங்களுக்கு என்டபிரைஸஸ் ஸ்ரீ லங்காவின் கீழ் பாதுகாப்பு நிவாரண நிதியை வழங்க நடவடிக்கை.

தனியார் நிறுவனங்களும் பிரசவ விடுமுறையை 3 மாத காலம் வழங்கும் வகையில் வழிவகைகளை செய்தல்.

சகல உற்பத்திகளினதும் தரத்தை உயர்த்த நடவடிக்கை.

அம்பேபுஸ்ஸ, வீரவில ஆகிய இடங்களில் இரண்டு விவசாய நிலங்களை சிறைச்சாலை திணைக்களத்துடன் இணைந்து அமைப்பதற்கும், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களுக்கு கைவினைப் பொருட்களை செய்யும் மத்திய நிலையம் ஒன்று தொம்பே கிராமத்தில் அமைக்கப்படவுள்ளதுடன், இதற்காக 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களுடன் கலந்துரையாடிய பின்னர் தேசிய வருமான சட்டத்தில் தேவையான திருத்தத்தை மேற்கொள்ளுதல்.

வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்கப்படும்.

இலங்கையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு உலகில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர வாய்ப்பு

தகவல் தொழிநுட்ப சேவை தொழிற்றுறைக்கு கலைப்பட்டத்தாரிகளை இணைத்துக்கொள்வதற்காக 1300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

கல்வித் துறைக்கு 32 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

நிபந்தனையுடன் வெளிநாட்டில் உயர்கல்வியை தொடர வாய்ப்பு. 10 வருடங்கள் இலங்கையில் தொழில்புரிய வேண்டும் என்பது கட்டாயம்.

ருஹூணு பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடமொன்றை நிறுவ நடவடிக்கை.

கம்பெரலிய வேலைத்திட்டத்தை வலுப்படுத்த 48,000 மில்லியன் ஒதுக்கீடு.

பல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 25,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

விளையாட்டுத்துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இலவச பயிற்சிகளை வழங்க நடவடிக்கை.

பாடசாலைகளின் அடிப்படை வசதிகளை அதிகரிக்க 32,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

3இலட்சம் மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் தோற்றினாலும் 35,000 மாணவர்களே பல்கலைக்கழகங்களுக்குச் செல்கின்றனர். ஏனை​யோர் அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பிருந்தும் நிதி வசதி இல்லாமல் கல்வியைத் தொடர முடியாதவர்களுக்கு “மை பியுச்சர்“ என்ற திட்டத்தின் கீழ் 1.1 மில்லியன் ரூபாய் வட்டியற்ற கடன் வழங்கப்படும்.

பொருளாதார அபவிருத்திக்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் உள்ளடக்கம்.

தேசிய ஒலிம்பிக் நிதியத்தை வலுப்படுத்த நடவடிக்கை

விளையாட்டுத்துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இலவச பயிற்சிகளை வழங்க நடவடிக்கை

கொலன்னாவ மற்றும் அலுவிகார விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்ய 300 மில்லியன்

சுகாதார துறையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 24,750 மில்லியன் ஒதுக்கீடு.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!