நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, March 12, 2019

தமிழரசுக்கட்சியின் செயலாளராக இருந்த ஆலாலசுந்தரத்தை 1985ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் திகதி ரெலோ இயக்கத்தினர் கடத்தி கொலை!

Tuesday, March 12, 2019
Tags#வரலாற்றின் பக்கங்களூடே....
தமிழரசுக்கட்சியின் செயலாளராக இருந்த ஆலாலசுந்தரத்தை 1985ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் திகதி ரெலோ இயக்கத்தினர் கடத்தி சென்று சுட்டுக்கொன்றனர்.
   
   
   
  யூலை கரவரத்தை அடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவிற்கு சென்று அங்கு தங்கியிருந்தனர். ஆனால் மானிப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் தனது உடுவில் இல்லத்திலும், கோப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆலாலசுந்தரம் தனது நல்லூர் இல்லத்திலும், பருத்தித்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரத்தினம் தனது தொண்டமானாறு இல்லத்திலும் தங்கிருந்தனர்.

இந்த மூவரையும் சுட்டுக்கொல்லுமாறு இந்திய றோ அமைப்பு ரெலோ இயக்கத்திற்கு உத்தரவிட்டிருந்தது. அக்காலப்பகுதியில் இந்திய றோவின் வழிநடத்தலில் ரெலோ இயக்கம் பல படுகொலைகளை யாழ்ப்பாணத்தில் நடத்தி கொண்டிருந்தது.

இந்திய றோ அமைப்பின் உத்தரவை அடுத்து ரெலோவின் தலைவர் சிறிசபாரத்தினம் தனது பொறுப்பாளர்களான பொபி, தாஸ் ஆகியோருக்கு தமிழ் தலைவர்கள் மூவரையும் சுட்டுக்கொல்லுமாறு தகவல் அனுப்பினார். உடுவிலிருந்த தர்மலிங்கத்தையும் நல்லூரில் இருந்த ஆலாலசுந்தரத்தையும் சுட்டுக்கொல்லுமாறு பொபிக்கு தகவல் அனுப்பினார். தொண்டமானாறில் இருந்த கே.துரைரத்தினத்தை சுட்டுக்கொல்லுமாறு வடமராட்சி பொறுப்பாளர் தாஸிற்கு உத்தரவிட்டார். ஆனால் துரைரத்தினத்தை சுட்டுக்கொல்வதற்கு தாஸ் இணங்கவில்லை. வடமராட்சியில் மக்கள் செல்வாக்குள்ள ஒரு மனிதரை எந்த குற்றச்சாட்டுக்களும் இன்றி எப்படி கொல்வது என அதற்கு அவர் இணங்கவில்லை. ஆனால் பொபி உடனடியாக ஆலாலசுந்தரத்தையும் தர்மலிங்கத்தையும் வீட்டிலிருந்து கடத்தி சென்று சித்திரவதை செய்து சுட்டுக்கொன்று விட்டு அவர்களின் வீடுகளுக்கு அருகில் சடலத்தை வீசியிருந்தனர்.
   
   
   
  பின்னர் போபிதலைமையிலான குழு தாஸை போட்டுத்தள்ளியது
டெலோ உறுப்பினர்களான தளபதி தாஸ் மற்றும் பீட்டர் , காளி , மோகன் , கிஷாந்த் ஆகியோர் பேச்சுவாரத்தைக்கு என அழைத்துயாழ் ,வைத்தியசாலையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்
பின்னர் விடுதலைப்பலிகளின் கப்டன் லிங்கத்தின் கடத்தலுடன் தொடங்கிய மோதலுடன் சிறிசபாரத்தினம் சுட்டு கொல்லப்பட்டார்
செந்தூர் தமிழ்