நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, February 6, 2019

புதிய கூட்டணி தொடர்பில் விக்கி தலைமையில் தொடரும் பேச்சுவார்த்தைகள்

  வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய கூட்டணியை மேலும் விஸ்த்தரிக்கும் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரில் விக்னேஸ்வரன் கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில், இந்தக் கூட்டணியில் இணைந்து செயற்படுவதற்கு ஏலவே ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் அனந்தி சசிதரனின் ஈழதமிழ் சுயாட்சி கழகம் மற்றும் ஐங்கரநேசனின் பசுமை தேசிய இயக்கம் என்பன இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளன.

  இந்தநிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளை இணைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

கிளிநொச்சியில் இடம்பெற்று சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்தில் வைத்து சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் நட்புரீதியாக சந்திப்பை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.