நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, February 11, 2019

எம்.பி. சமிந்த விஜேசிறியை கைது செய்ய சபாநாயகர் அனுமதி

  காவல்துறை அதிகாரியை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை கைது செய்வதற்கு சபாநாயகரின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதி நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பண்டாரவளை நகரின் சுற்றுவட்ட பகுதியில், நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, பயணித்த மகிழூந்து நிறுத்தி வைக்கப்பட்ட போது, மீண்டும் முன்னோக்கி சென்றபோது ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

  பண்டாரவளை காவல்நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரியே இந்த தாக்குதலுக்கு உள்ளானார்.

சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்கான காவற்துறை அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.