நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, February 9, 2019

வட. மாகாண பாடசாலைகளிற்கு முக்கிய உத்தரவு

  வட. மாகாண பாடசாலைகள் அனைத்திலும் சமய வழிபாட்டுடன் உடற்பயிற்சி மற்றும் யோகா என்பவற்றை வட. மாகாண கல்வி அமைச்சு கட்டாயமாக்கியுள்ளது.

அதன்படி எதிர்வரும் 18ஆம் திகதி முதல் இது வட. மாகாண பாடசாலைகளில் நடைமுறைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், முறையான உடற்பயிற்சி எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதை விளக்கும் வகையிலான இறுவட்டையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

வட மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களை இணைத்து யோகா உடற்பயிற்சி காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது.

சுமார் 8 நிமிடங்களை கொண்டமைந்துள்ள இந்த காணொளியில் வரும் மூன்று உடற்பயிற்சிகளை மாணவர்கள் காலை வழிபாட்டின் போது மேற்கொள்ள வேண்டும்.

இது தொடர்பாக வலயங்களிலுள்ள விளையாட்டுத்துறை பொறுப்பாளர்களுக்கு 12ஆம் திகதி அறிவித்தல் வழங்கப்படுவதுடன், அவர்களுக்குப் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது.

தரம் 6 – 13 வரையுள்ள பாடசாலை மாணவர்கள் இரு நாட்கள் இந்த உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என்று மாகாண கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.