நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, February 7, 2019

பல்கலைக்கழக மாணவர்களுக்கு விழுந்த அடி
யாழ்ப்பாணத்தில் ​நேற்று நண்பகல் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஊடகவியலாளரும், பல்கலைக்கழக மாணவனுமான ப.சுஜீவன் என்பவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக நான்காம் வருட மாணவர்களினாலேயே அவர் மூர்க்கத்தனமான சரமாரியான  தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். 

தாக்குதலுக்கு உள்ளானவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த மாணவனை நேற்று  பல்கலைக்கழக வளாகத்திற்குள் வெளியில் வைத்து பின்தொடர்ந்த பல்கலைக்கழக நான்காம் வருட மாணவர்கள் அவரை மோட்டார் சைக்கிலில் ஏற்றிச் செல்ல முயற்சித்துள்ளனர்.

எனினும் வீதியில் பொது மக்களின் போக்குவரத்து அதிகமாக இருந்த காரணத்தினால் அம்மாணவனை நான்காம் வருட மாணவர்களால் கூட்டிச் செல்ல முடியவில்லை. 

இந்நிலையில் பல்கலைக்கழக வாளாகத்திற்குள் குறித்த மாணவனை சூழ்ந்த நான்காம் வருட மாணவர்கள் அவர் மீது சரமாரி தாக்குதலை நடத்தியுள்ளனர். 

இதனால் குறித்த மாணவனின் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!