நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, February 4, 2019

தேசிய அரசு யோசனையை நிராகரித்தார் மைத்ரி ! சுதந்திர தின உரையில் அதிரடி ! ஜனாதிபதி உரையின் சாராம்சம்...   
   
   
 
* பெப்ரவரி  04 நாம் சுதந்திரமடைந்த நாள். வெளிநாட்டு அழுத்தங்கள் அன்று போல் இன்றும் வேறு வடிவத்தில் வந்துள்ளன.

* சுதந்திரதின் பின்னர் இதுவரை ஒரு அரசியல் ரீதியான தீர்வு மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு சரியான தீர்வை காண முடியாமல் இருப்பது ஒரு பின்னடைவே. இந்த நூற்றாண்டுக்கேற்ப நாம் எமது பொருளாதார யுக்திகளை வகுக்க வேண்டும்.

* 2015 நாம் அமைத்த தேசிய அரசு செய்ய வேண்டியதை செய்யவில்லை.செய்யக் கூடாததை செய்தது. மக்களின் தேவை நிறைவேற்றப்படவில்லை.பாராளுமன்றம் இன்று கேலிப்பொருளாகியுள்ளது. துரதிஷ்ட சம்பவங்கள் நடக்கும் இடமாக அது மாறியுள்ளமை கவலைக்குரியது.

* இனப்பிரச்சினைக்கு தீர்வு பற்றி பல தலைவர்கள் பேசினர் . ஆனால் பொருளாதார முன்னேற்றம் பற்றி யாரும் கவனிக்கவில்லை. இரண்டுமே வெற்றியடையவில்லை. 
   
   
   
 
* மாகாண சபைத் தேர்தல் ஒன்றரை வருட காலம் நடத்தப்படாமல் இருப்பது ஜனநாயகம் இல்லை. இதை பற்றி அரச சார்பற்ற நிறுவனங்கள் ஏதும் பேசாதது ஏன் ?

*  தேசிய அரசை அமைக்க பேசப்படுகிறது.அது தேவைதானா? நான் ஊடகங்களில் அதை கண்டேன்.அதனை நான் நிராகரிக்கிறேன்.ஒரு எம் பியை சேர்த்து தேசிய அரசு அமைப்பது சரிதானா? 

* போதைப்பொருள் கேந்திர நிலையமாக இலங்கை மாற்றியுள்ளது..

* ஊழலை - மோசடியை - பாதாள உலக கோஷ்டியை ஒழிக்க நாம் திடசங்கற்பம் பூணுவோம்.

* தகைமை அடிப்படையில் அரச சேவை முன்னெடுக்கப்பட வேண்டும்.

Sivarajah anna
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!