நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, February 5, 2019

சம்பந்தனை தொலைபேசியில் வாழ்த்திய மஹிந்தர்!

  நீங்கள் நீண்ட ஆயுளோடு நலமாகவாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இராஜோதயம் சம்பந்தனின் 86 ஆவது பிறந்தநாள் நேற்றாகும்.

சம்பந்தன் எம்.பிக்கு அழைப்பை ஏற்படுத்திய மஹிந்த ராஜபக்ச,

  இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீண்ட ஆயுளோடு நலமாக வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்” என வாழ்த்திவிட்டு, சமகால விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

இதற்கு நன்றி தெரிவித்த சம்பந்தன் எம்.பி., நாடாளுமன்றத்தில் வைத்து நேரில் சந்திக்கின்றேன் எனக் கூறியுள்ளார்.