Monday, February 4, 2019

சுதந்திரதினம் தொடர்பில் 'நான் ஸ்ரீலங்கன் இல்லை' எனும் தலைப்பில் தமிழர் மத்தியில் வைரலாகும் கவிதை!


   
   
   
  இலங்கையின் சுதந்திரதினம் இன்று பலராலும் கொண்டாடப்பட்டு வந்தாலும் தமிழர் பகுதிகளில் கரிநாளாகவே பார்க்கப்படுகிறது. பல இடங்களில் பல்வேறு வகையான ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன...

அந்தவகையில் ஈழத்தில் பலராலும் அறியப்பட்ட கவிஞர்களில் ஒருவரான தீபச்செல்வன் 'நான் ஸ்ரீலங்கன் இல்லை' எனும் தலைப்பில் எழுதிய கவிதை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது...

   
   
   
 

நான் ஸ்ரீலங்கன் இல்லை!!!

-----------------------

வழிகளை கடக்க

என்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறது

பாலஸ்தீனரின் கையிலிருக்கும்

இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல

சோதனைச்சாவடிகளை கடக்க

என்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறது

ஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்

அமெரிக்க அடையாள அட்டையைப்போல

செலவு செய்ய

என்னிடம் சில நாணயக்குற்றிகள் இருக்கின்றன

சிரியரிப் பிஜையிடமிருக்கும் இருக்கும்

பிரெஞ்சு நாணயக் குற்றிகள் போல

என்னுடைய மண்ணில்

ஒரு தேசிய கீதம் ஒலிபரப்படுகிறது

மணிப்பூரில் ஒலிக்கும்

இந்திய கீதம்போல

என்னுடைய தேசத்தில்

ஒரு கொடி ஏற்றப்பட்டிருக்கிறது

திபெத்தில் பறக்கும்

சீனக் கொடி போல

என்னுடைய விரலில்

நாடற்ற அகதியின் முத்திரை இருக்கிறது

மியன்மாரியரின் கையில்

தீயால் இடப்பட்ட காயத்தைப்போல

- தீபச்செல்வன் -

0 கருத்துரைகள்:

Note: Only a member of this blog may post a comment.

tamil news tamil news ,
tamil news ,
sri lanka news ,
tamil ,
video ,
lankasri tamil news ,
jaffna news,
tamil cricket news ,
google tamil news ,
online shopping sri lanka