நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, February 4, 2019

வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர்களின் தகாத உறவு செய்தியை அம்பலப்படுத்தியமைக்கு எதிர்ப்பு! போதனா வைத்தியசாலை தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு!இன்று காலை 7 மணி முதல் யாழ் போதனா வைத்தியசாலை தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். யாழ் போதனா வைத்தியசாலையில் இரண்டு தாதிய உத்தியோகத்தர்கள் தகாத உறவில் ஈடுபட்ட சம்பவத்தை ஊடகங்களிற்கு வெளியிடப்பட்ட சம்பவத்தையடுத்தே, தாதிய உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.
   
   
   
 

யாழ் போதனா வைத்தியசாலையின் இரண்டு தாதிய உத்தியோகத்தர்கள் தகாத உறவில் ஈடுபட்ட சம்பவம் சுமார் ஒரு மாதத்தின் முன்னர் இடம்பெற்றிருந்தது. இது நேற்று அம்பலமானது.

வைத்தியசாலை பணிப்பாளர் அதை உறுதிசெய்திருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை 7 மணி முதல் தாதிய உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். சுகாதார அமைச்சின் பணிப்பாளரிற்கு இது குறித்த தகவலை அனுப்பியுள்ளனர்.

   
   
   
  மூன்று கோரிக்கைகளை தாதியர்கள் முன்வைத்துள்ளனர். வைத்தியசாலை பணிப்பாளரால் வெளியிடப்பட்ட தகவலிற்கு மறுப்பறிக்கை வெளியிட வேண்டும், செய்தியை வெளியிட்ட இணைய ஊடகங்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும், தாதியர் சம்பந்தமான விவகாரங்களை, தாதியர்களுடன் கலந்துரையாடியே முடிவெடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வடமாகாணம் தழுவிய போராட்டமாக விஸ்தரிக்கவுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!