நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, February 13, 2019

இலங்கையை ஆட்டங்காண வைக்கப் போகும் விவகாரம்! அம்பலமாகவுள்ள விவகாரம்


டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் வர்த்தகரும், பாதாள உலகக்குழு தலைவருமான மாகந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்களுடன் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நேரடி தொடர்புகளை வைத்துள்ளதாக அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ, ராஜித சேனாரத்ன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் பெயர் விவரங்கள் விரைவில் அம்பலமாகும் எனவும் அமைச்சர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பில் அமைச்சர்கள் மேலும் கூறுகையில்,

நாட்டில் போதைப்பொருள் வர்த்தகமும், பாதாள உலகக்குழுவினரின் அட்டகாசங்களும் என்றுமில்லாத வகையில் தலைதூக்க மஹிந்த அணியினரே காரணம்.

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுவினருடன் மஹிந்த அணியினர் நேரடி உறவை வைத்துள்ளார்கள்.

மஹிந்த அணியில் உள்ள சண்டியர்கள் அனைவரும் போதைப்பொருள் வர்த்தகத்துக்குப் பெயர் போனவர்களாக உள்ளனர்.

இவர்கள்தான் அண்மையில் நாடாளுமன்றத்தில் சொத்துக்களை சேதப்படுத்தினர். சபாநாயகரையும், பிரதமரையும் கொலை செய்ய முயன்றனர்.

பாதுகாப்பு அமைச்சையும் சட்டம், ஒழுங்கு அமைச்சையும் தம் வசம் வைத்திருக்கும் ஜனாதிபதி அமைதியாக இருந்தாலும் இவர்களுக்கு எதிராக நீதித்துறையின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுப்போம் என குறிப்பிட்டுள்ளனர்.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!