நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, February 7, 2019

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்திய பாகிஸ்தான் பெண்மணி!


   
   
   
  பாகிஸ்தானிய தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 350 கிராம் போதைப்பொருட்களை கடத்திய போது கைது பொலிஸார் செய்துள்ளனர். அதன் பெறுமதி விலை 42 மில்லியன் ஆகும் எனவும் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானிலிருந்து வரும் இலங்கை விமானங்களை கடுமையான சோதனைகளை குற்றத்தடுப்பு பொலிஸார் செய்வதால் நேரடியாக வராமல் துபாய்லிருந்து இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தான் பெண்மணியை பொலிஸார் பரிசோதனை பகுதியில் வைத்து அவர் அணிந்திருந்த ஹபாயாவை அகற்ற நெருங்கும் தர்வாயில் சடுதியாக தமது ஹபாயா உள்ளாடையில் வைத்திருந்த ஹெரோயின் போதைப்பொருட்களை வாயினுள் விழுங்கியுள்ளார்.

பொலிஸார் திடிரென்று இப்படியொரு சம்பவம் எதிர்பார்க்கும் முன்னே குறித்த பெண் போதைப்பொருள் கையோடு பொலிஸாரிடம் சிக்காமல் இருக்கும் முகமாக தொண்டையினூடாக விழுங்கியது பேரதிர்ச்சி ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து பெண்மணி வயிறு விரிந்தது அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையமிருந்து அம்பிலண்ஸ் வண்டி மூலம் நீர்கொழும்பு நவலோக வைத்தியசாலை கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு பெண்ணிண் உயிரை காப்பாற்றும் முகமாக மலம் இழக்கி மருந்தை கொடுத்து வயிற்றறை பூராக நீரினால் நிரப்பி மலத்தை வெளியேற்றி அதிலிருந்து வைத்தியர்களால் கெரோயின் போதைப்பொருள்களும் மீட்கப்பட்டது.

அதே நேரம் குறித்த பாகிஸ்தான் பெண்மணி உயிரும் காப்பாற்றப்பட்டது. இப்பெண்மணியோடு உடந்தையாகயிருந்த இலங்கை சேர்ந்த ஏறாவூர் நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
   
   
   
 

இப்பெண்மணியின் வாக்கு மூலத்திலிருந்து இதுவரை 6 தடவை ஹபாயினுள் போதைப்பொருட்களை கடத்தியதாகவும் அந்த துணிவில்தான் இம்முறையும் கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.

இதேபோன்று கடந்த சில தினங்களுக்கு முன் ஈரானிய பெண்மணி ஹபாயில் போதைப்பொருள் கடத்திய நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!